Fact Check: உலகத் தலைவர்களில் யாருக்கும் இல்லாத வரவேற்பு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டதா?

பென்டகனில் உலகத் தலைவர்களில் யாருக்கும் இல்லாத வரவேற்பு பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலியுடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது
பென்டகனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
பென்டகனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
Published on
1 min read

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவிற்கு சென்றபோது அமெரிக்க ராணுவத்ததலைமையகத்தில் கௌரவ வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும் அது உலகத்தலைவர்களில் யாருக்கும் அளிக்கப்படவில்லை என்றும் கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இந்த மரியாதை கிடைத்ததிருப்பதாகவும் கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இதே வரவேற்பு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோகர் பாரிக்கர் உள்பட பல்வேறு உலகத்தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய வைரலாகும் தகவல் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த 2022ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு Honor Cardon எனப்படும் இந்த வரவேற்பு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் அளிக்கப்பட்டதாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ANI செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, இவருக்கு மட்டும்தான் இந்த வரவேற்பு( Honor Cardon) அளிக்கப்பட்டதா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்ட அதே வரவேற்பு பலருக்கும் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

நம் தேடலின்படி, 2018ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களுக்கு Honor Cardon வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இவர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உள்பட பல்வேறு உலகத் தலைவர்களுக்கும் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Conclusion:

முடிவாக நம் தேடலில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக உலகத் தலைவர்களில் யாருக்கும் இல்லாத வரவேற்பு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் இதே வரவேற்பு இந்தியாவின் பல்வேறு பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கும் உலகத் தலைவர்கள் பலருக்கும் அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in