Fact Check: நிலவை தாக்கிய விண்கல் என்று வைரலாகும் காணொலி? உண்மை அறிக

2015ஆம் ஆண்டு விண்கல் ஒன்று நிலவைத் தாக்குகியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
நிலவின் மீது மோதிய விண்கல்
நிலவின் மீது மோதிய விண்கல்
Published on
2 min read

2015ஆம் ஆண்டு பெரிய விண்கல் ஒன்று நிலவைத் தாக்குகியதாகவும் அது குறித்த காணொலி தற்போது வெளியாகியுள்ளது என்றும் கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், வெள்ளை நிற பொருள் ஒன்று நிலவைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

முதலில் வைரலாகும் தகவல் உண்மைதானா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நிலவு மீது விண்கல் மோதியதாக Space.com செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, சந்திரன் தொடர்ந்து விண்கற்களால் தாக்கப்படுகிறது. இதனை ஜப்பானில் உள்ள ஹிராட்சுகா நகர அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரான டெய்ச்சி ஃபுஜி, மிகச் சமீபத்திய மோதல்களில் சிலவற்றைப் படம் பிடித்துள்ளார்.

Space.com வெளியிட்டுள்ள செய்தி
Space.com வெளியிட்டுள்ள செய்தி

கேமராக்களைப் பயன்படுத்தி 2024ஆம் ஆண்டு டிசம்பர் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நிலவில் விண்கல் தாக்கியதை ஃபுஜி ஆவணப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போன்றதொரு மோதல் நிகழ்வையும் காட்சிப்படுத்தி உள்ளார் டெய்ச்சி ஃபுஜி இதுதொடர்பான செய்தியையும் Space.com வெளியிட்டுள்ளது.

டெய்ச்சி ஃபுஜி வெளியிட்டுள்ள காணொலியையும் வைரலாகும் காணொலியையும் ஒப்பிட்டு பார்த்ததில் இரண்டுக்கும் பெருமளவு வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. உதாரணமாக வைரலாகும் காணொலியில் நிலவின் மீது விண்கல் மோதும் காட்சி தெளிவாகவும் தத்ரூபமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான காணொலியில் அவ்வாறாக இல்லை நிலவில் மோதும் காட்சி சிறு ஒளிக் கீற்றை போன்று உள்ளது. அதேபோன்று, 2015ஆம் ஆண்டு இவ்வாறு மோதல் நிகழ்ந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை.‌

தொடர்ந்து, வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, ViralVideoLab என்ற யூடியூப் சேனலில் “Moon Crash - Something hit the moon” என்ற தலைப்பில் வைரலாகும் அதே காணொலி 2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில் “இக்காணொலி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அச்சேனலின் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “இந்த சேனல் பொழுதுபோக்குக்காக மட்டுமே, சேனலில் காட்டப்படும் வீடியோக்கள் சிலவற்றில் CGI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே சில காணொலிகள் யதார்த்தத்துடன் ஒத்துப்போகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொலி மற்றும் யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ள டிஸ்கிரிப்ஷன்
காணொலி மற்றும் யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ள டிஸ்கிரிப்ஷன்

Conclusion:

முடிவாக, நம் தேடலில் 2015ஆம் ஆண்டு விண்கல் ஒன்று நிலவைத் தாக்குகியதாக வைரலாகும் காணொலி டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in