

”அது எப்படிடா மூணே மாசத்துல இவ்வளவு பெரிய வீடு வாங்குறீங்க. எவ்வளவு confident அடுத்த வீடு அப்புறம் palace எல்லாம் வாங்குவாங்கன்னு சொல்லிருத்தை பார்த்தால் மிக பெரிய அளவுல தமிழ் நாட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிருக்கான் இல்ல கொள்ளை அடிக்க பிளான் இருக்கும் போல” என்று காணொலி பரவுகிறது. அமைச்சரான மூன்று மாதத்தில் பிரம்மாண்டமான வீட்டை சென்னையில் வாங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியை முக்கியக் காட்சிகளாகப் (Key-frames) பிரித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது, ராஜ்மோகனின் மனைவி கவிதா ராஜ்மோகன் தனது யூடியூப் தளத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்றே இக்காணொலியைப் பதிவேற்றியிருந்தது உறுதியானது.
தவெக தலைமையிலான அரசு 2026ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே ஆட்சி அமைத்தது; அதன்பின்னரே ராஜ்மோகன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதன்மூலம், அவர் அமைச்சராகப் பதவியேற்பதற்கு முந்தைய ஆண்டிலேயே (2025) வாங்கப்பட்ட வீடு தொடர்பான காணொலியே, தற்போது தவறான தகவலுடன் பரப்பப்பட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.
Conclusion:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அமைச்சரான மூன்று மாதத்தில் பிரம்மாண்ட வீடு வாங்கியதாகப் பரவும் காணொலி 2025ஆம் ஆண்டிலேயே வெளியான பழைய காணொலி என்பது நம்பகமான ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.