தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடுகிறார் என்று காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய முதலில் கிருத்திகா உதயநிதியின் சமூக வலைதள பக்கங்களில் தேடியதில் அவர் இளைஞர்களுடன் நடனமாடுவது போனாற எந்த ஒரு பதிவும் இடம் பெறவில்லை. மேலும் இது போன்று நடனம் ஆடினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, தன்னை கலைஞர் என்று குறிப்பிட்டுள்ள Trisha Shetty என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வைரலாகும் அதே காணொலியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கொண்டு வைரலாகும் காணொலியில் இருப்பது திருஷா ஷெட்டி என்று கூற முடிகிறது. இவருடைய சாயலும் கிருத்திகா உதயநிதியின் சாயலும் ஒருசேர இருப்பதால் திருஷா ஷெட்டியை கீர்த்திகா உதயநிதி என்று கூறி பரப்பி வருகின்றனர் என்று கூற முடிகிறது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இளைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவதாக வைரலாகும் காணொலியில் இருப்பது திருஷா ஷெட்டி என்பவர் என்றும் வைரலாகும் தகவல் தவறானது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.