Fact Check: மது அருந்துவோருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்தாரா? உண்மை என்ன

அமைச்சர் விக்னேஷ், மது அருந்துவோருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று அறிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்
Fact Check: மது அருந்துவோருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று அமைச்சர் விக்னேஷ் அறிவித்தாரா? உண்மை என்ன
fifthestatedigital1
Published on
1 min read

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரிலான நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் மது அருந்துபவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டிருப்பது என்று தெரியவந்தது.

முதலில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் யூடியூப் தளத்தை ஆய்வு செய்ததில் அமைச்சர் விக்னேஷ் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் அவர்களால் வெளியிடப்படவில்லை என்பது உறுதியாகிறது.

இரண்டாவதாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகளிலோ அல்லது போக்குவரத்துத் துறையின் அறிவிப்புகளிலோ மது அருந்துபவர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வழங்கப்படும் என்பது போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அரசு மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இலவச மற்றும் கட்டணமில்லாப் பயணத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மேலும், வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என்றும் தங்களது நிறுவனத்தின் பெயரில் எடிட் செய்யப்பட்டுப் பரப்பப்படுகிறது என்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தரப்பில் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டு உண்மை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Conclusion:

மது அருந்துபவர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் விக்னேஷ் பெயரிலும், புதிய தலைமுறை தொலைக்காட்சி நியூஸ் கார்டு வடிவிலும் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது.

logo
South Check
southcheck.in