

"பயப்படலாம் ஆனால் இந்த அளவுக்கு தொடர் நடுங்கி பயப்படக்கூடாது எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்த பிறகு மேற்கு வங்காளத்தில் இருந்து பல்லாயிரம் ரோஹிங்கியா பங்களாதேஷ் முஸ்லிம்கள் பங்களாதேஷ்க்கு திரும்பிச் செல்லும் வீடியோ. இதேபோன்று தமிழ்நாட்டில் இருக்க்கும் முஸ்லிம்கள் திமுக வுக்கு வாக்களிப்பதை தடுக்கும் என்பதற்காகத்தான் இந்த எஸ் ஐ ஆர் ஐ எதிர்க்கிறீர்களா" என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வங்கதேசத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொலி என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொளியின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Associated Press ஊடகம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி யூடியூபில் வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
அதன்படி, வங்கதேசத்தில் காலநிலை மாற்றத்தால் குடிபெயர்பவர்களுக்கு மோங்லா என்ற நகரம் தஞ்சம் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதே காணொலியை razuart என்ற யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவரும் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை பதிவிட்டுள்ளனர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, எஸ்ஐஆர் கணக்கெடுப்பிற்கு பயந்து மேற்கு வங்காளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்கு திரும்பிச் செல்வதாக வைரலாகும் காணொலி 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொலி என்றும் அதில் இருப்பவர்கள் காலநிலை மாற்றத்தால் வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.