Fact Check: கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் நக்கீரன் கோபால் பேசியதாக பரவும் காணொலியின் உண்மை பின்னணி என்ன?

கிரானைட் தொழிலதிபர் ஆர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசியதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது
Fact Check: கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் நக்கீரன் கோபால் பேசியதாக பரவும் காணொலியின் உண்மை பின்னணி என்ன?
fifthestatedigital1
Published on
2 min read

கிரானைட் தொழிலதிபர் ஆர்.வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஆவேசமாக கருத்து தெரிவிப்பது போன்ற ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், “இந்த வீரமணி நாய் பல குழந்தைகளை Poyes Gardenல வீடு எடுத்து பலபேருக்கு கூட்டிக் கொடுத்திருக்கான். இதெல்லாம் கேட்குறப்போ செருப்பைக் கலட்டி அடிக்கத் தோணுது. இதில் கொடுமை என்னனா, இது கடந்த (திமுக) ஆட்சிலே நடந்திருக்குது. அதிகாரிகள் முதல் திமுக அரசியல்வாதிகள் வரைக்கும் பல பேருக்கு இதில் தொடர்பு இருந்திருக்குது. அதனால்தான் ஒருத்தனும் நடவடிக்கை எடுக்கல, ஒரு நாயும் கண்டுக்கலை, எல்லாரும் சேர்ந்து அமுக்கி வெச்சுட்டாங்க. ஆனாலும் இந்த விஷயம் ஆதிமுக ஆட்சிலையோ, இல்லாட்டி இந்த (தவெக) ஆட்சிலும் நடந்திருந்தா, என்ன போல அத்தனை தமிழ் உடகங்களும் இதைப் பற்றிய 24 மணி நேரமும் பேசி இருப்போம்” என்று அவர் கூறுகிறார்.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலி உண்மைதானா என்பதை கண்டறிய நக்கீரன் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த குறிப்பிட்ட காணொலி வெளியாகி உள்ளதா என்று தேடுகையில், அவ்வாறான எந்த ஒரு காணொலியும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து, காணொலியை கூர்ந்து கவனித்தபோது அதில் இருக்கக்கூடிய குரல் மற்றும் பாவனை நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுடையது போன்று இல்லை என்றும், AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலியை போன்றும் இருப்பது தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில் காணொலியை Hivemoderation இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது. வைரலாகும் காணொலி 99.1% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்ற முடிவைத்தந்தது. 

Conclusion:

கிரானைட் அதிபர் ஆர் வீரமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் உண்மை என்றாலும், அதில் நக்கீரன் கோபால் பேசியதாக பகிரப்படும் காணொலி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

logo
South Check
southcheck.in