

“தீபாவளி நல்வாழ்த்துகள் ₹1,000 அனைவருக்கும் இப்போதே கிளைம் செய்யுங்கள் தீபாவளியைக் கொண்டாடுங்கள்! ₹1,000 ரொக்கம் பெறுங்கள்! உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்! அனைவருக்கும் ₹1,000 ரொக்கப் பரிசு தயாராக உள்ளது!” என்ற தகவலுடன் இணையதள லிங்குடன் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் ஸ்பாம் என்று தெரியவந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்ய வைரலாகும் இணை லிங்கை கிளிக் செய்து பார்த்தோம். அப்போது, PayTM லோகோவுடன் “வாழ்த்துகள்! உங்கள் ₹1,000 பரிசைப் பெற இன்னும் ஒரே ஒரு இறுதிப் படி மட்டுமே உள்ளது. இறுதி சரிபார்ப்பை முடிக்க கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்யவும். சரிபார்ப்பிற்கு இந்தப் படி மிகவும் அவசியமானது, எதையும் தவிர்க்க வேண்டாம். என்று குறிப்பிட்டு “மொபைல் எண்ணை உள்ளிடவும்”, “சரிபார்ப்பை முடிக்கவும்”, “உடனே சரிபார்க்கவும்” என்ற மூன்று விருப்பத் தேர்வுகள் உள்ளன.
அதில், “மொபைல் எண்ணை உள்ளிடவும்” என்பதை கிளிக் செய்தபின் தொலைபேசி எண்ணை பதிவிடும்படி ஒரு பக்கம் திறக்கிறது. அதில், தொலைபேசி எண்ணை பதிவிட்டு தொடர்ந்து “அடுத்து” என்பதை கிளிக் செய்தால் ரூபாய் 1,000 பரிசுத்தொகையை பெற வேண்டும் என்றால் இத்தகவலை 5 குழுக்களுக்கோ அல்லது 20 நண்பர்களுக்கோ WhatsApp, Telegram அல்லது Instagram-ல் பகிரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றை அவ்வாறு பகிர்ந்தாலும் வெவ்வேறு Pop-up இணையதளங்கள் திறக்குமே தவிற, ரூபாய் 1,000 பரிசு கிடைக்காது. பொதுவாக ஸ்பேம் இணையதளங்கள் தான் இவ்வாறு தகவலை பலருக்கு அனுப்பக்கூறி இயங்கும், இதன் மூலம் வைரலாகும் இணைய லிங்கும் ஸ்பேம் என்று தெரியவருகிறது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தீபாவளியையொட்டி PayTM ரூபாய் 1,000 ரொக்கமாக வழங்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் மற்றும் இணைய லிங்க் ஸ்பேம் என்று தெரியவந்தது.