

“ரூ.4000ம் கோடி செலவு செய்தும் சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ரூ.4000ம் கோடி என்னாச்சு” என்ற கேள்வியுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் இப்புகைப்பாட்ம் குஜராத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
புகைப்படத்தின் உண்மை தன்மையைக் கண்டறிய அதனை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கன மழை காரணமாக சாலைகளில் தேங்கிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் பயணித்தன” என்று The Hindu கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், “குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது” என்று தினமலர் ஊடகமும் அதே ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. It's Tomorrow News யூடியூப் சேனலிலும் வைரலாகும் அதே புகைப்படத்தை தம்நெயிலாக வைத்து குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 11 பேர் பலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவில் 2024ஆம் ஆண்டு குஜராத் ராஜ்கோட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை 2025 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் என்று தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரிய வந்தது.