Fact Check: தவெக தொண்டர் விக்னேஷின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்த புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா?

Fact Check: தவெக தொண்டர் விக்னேஷின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்த புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா?
Published on
1 min read

தவெக தலைவர் விஜய்யின் வண்டியை பின் தொடர்ந்து சென்று விபத்தில் உயிரிழந்த விக்னேஷின் பெற்றோரை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று கடந்த மார்ச் 25ஆம் தேதி  ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி பலரும் பரப்பி வருகின்றனர். மேலும், அதன் வலது புர கீழ் மூலையில் Gemini AI-யின் லோகோ இடம்பெற்றுள்ளது.

Fact-Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் உண்மையானது என்றும் அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய முதலில் அமைச்சர் உயிரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சென்று சந்தித்தாரா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Sun News ஊடகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் வாகனத்தை | பின் தொடர்ந்து சென்று, விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஸ்” என்று வைரலாகும் அதே புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், Gemini AI-யின் லோகோ இடம்பெறவில்லை.

மேலும், தொடர்ந்து தேடுகையில், “தவெக தலைவர் விஜய்யின் வண்டியை பின் தொடர்ந்து சென்று விபத்தில் உயிரி*ந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஸ்! “ என்ற காணொலியுடன் நியூஸ் தமிழ் 24x7 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தவெக தலைவர் விஜய்யின் வண்டியை பின்தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷின் புகைப்படம் உண்மையானது என்றும் அவர் நேரில் சென்று சந்தித்தார் என்று தெரியவந்தது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in