Fact Check: காவலரை தாக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றதா?

தமிழ்நாட்டில் காவலர் ஒருவர் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
தமிழ்நாட்டில் காவலர் தாக்கப்படுகிறார்
தமிழ்நாட்டில் காவலர் தாக்கப்படுகிறார்
Published on
1 min read

#“சட்டம் ஒழுங்கை காப்பாத்துற போலீசுக்கு இந்த நிலைமையா… திருட்டு திராவிட மாடலின் அடுத்த விடியல் திருட்டு திராவிட மாடல்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், காவலர் ஒருவர் மரக் கட்டையால் தாக்கப்படும் காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றது என்பது தெரிய வந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொளியின் குறிப்பிட்ட பகுதியை ரிவஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் காணொலியுடன் India Today கடந்த ஜுலை 19ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “ஆந்திர மாநிலம் திருப்பதியில் குடிபோதையில் தலைமைக் காவலர் ஒருவரால் மரக் கட்டையால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த தலைமை காவலர் சுவாமி தாஸ், கூடூர் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கூடூர் டிஎஸ்பி சூர்யநாராயண ரெட்டி கூறுகையில், “மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லால்துக் கலிந்தா, தலைமைக் காவலர் தனது பணியைச் செய்து கொண்டிருந்தபோது, அவரை மரக்கிளையால் தாக்கினார். தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Deccan Chronicle ஊடகமும் அதே தேதியில் வெளியிட்டுள்ளது. மேலும், Surya Reddy என்ற பத்திரிகையாளர் தனது எக்ஸ் தளத்தில் இச்சம்பவத்தை விரிவாக எழுதி பதிவிட்டுள்ளார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டில் காவலர் ஒருவர் தாக்கப்படுவதாக பகிரப்படும் காணொலி உண்மையில் ஆந்திராவில் நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in