

வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பெய்த மழையால் சாலையின் நடுவே படுகுழி ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத் செக்கின் ஆய்வில் வைரலாவும் புகைப்படம் 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2017ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி தி நியூஸ் மினிட் ஊடகம் வைரலாகும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.
அதன்படி, “கீழ் பாக்கத்தில் உள்ள டெய்லர் சாலை - ஈ.வி.ஆர் சந்திப்பில் ஒரு பெரிய குழி ஏற்பட்டிருந்தது. காவல்துறை தகவலின்படி, கீழ் பாக்கத்தில் ஏற்பட்ட பள்ளம், அப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை மெட்ரோ அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகமும் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் சமீபத்தில் சென்னையில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட படுகுழி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.