Fact Check: விவசாய நிலத்தில் ராக்கெட் விழுந்ததா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி?

கும்பகோணத்தின் கிராம பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ராக்கெட் விழுந்ததாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
வயல்வெளியில் ராக்கெட் விழுந்ததாக வைரலாகும் காணொலி
வயல்வெளியில் ராக்கெட் விழுந்ததாக வைரலாகும் காணொலி
Published on
1 min read

“கும்பகோணம் அருகே அன்டக்குடி என்னும் கிராம பகுதியில் விவசாய நிலத்தில் Rocket வெடித்து சிதறியதாக செய்தி பரவியது அது உன்மையா…” என்ற கேப்ஷனுடன் ராக்கெட் போன்ற ஒன்று வயல்வெளியில் வீழ்வது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் காணொலி கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இக்கணொளியின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவேர்ஸ் இமேஜ் செய்து பார்த்தோம். அப்போது, Unreal vfx என்ற யூடியூப் சேனலில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட காணொலி என்று வைரலாகும் காணொலியை 2023ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பதிவிட்டுள்ளனர். மேலும், இது Adobe After effects என்ற மென்பொருளைக்கொண்டு உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலி கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

தொடர்ந்து, அதில் உள்ள ஒரு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வில்லோ ரன் விமான நிலையம் அருகே ஒரு விமான நிகழ்ச்சியின் போது விமானம் கார் நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியதாக Express ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அதில் இருந்த மற்றொரு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா விமான தளத்தில் விமானப் படையின் பயிற்சியின் போது டியாசா பகுதியில் போர் விமானம் விபத்துக்குள்ளானது என்று India TV News கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலில் முடிவாக கும்பகோணம் அருகே அன்டக்குடி எனும் கிராம பகுதியில்  உள்ள விவசாய நிலத்தில் ராக்கெட் விழுந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் அதில் இருக்கும் இரண்டு புகைப்படங்களும் வெவ்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in