Fact Check: த.வெ.க மாநாட்டிற்கு வருகை தர உள்ள ரொனால்டோ; உண்மை என்ன?

கால்பந்து வீரர் ரொனால்டோ த.வெ.க மாநாட்டிற்கு வருகை தர உள்ளதாக புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
த.வெ.க மாநாட்டிற்கு ரொனால்டோ வருகை தர உள்ளார் என்று வைரலாகும் நியூஸ் கார்ட்
த.வெ.க மாநாட்டிற்கு ரொனால்டோ வருகை தர உள்ளார் என்று வைரலாகும் நியூஸ் கார்ட்
Published on
1 min read

“கிறிஸ்டியானோ ரொனால்டோ வருகை - நாளை நடைபெற உள்ள முதல் தவெக மாநில மாநாட்டிற்கு ஜெர்மனி நாட்டின் புகழ் பெற்ற கால்பந்தாட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நாளை தவெக மாநாடு திடலுக்கு வருகை தரவுள்ளார்” என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளதாக அதன் நியூஸ் கார்ட் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலி என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய த.வெ.க மாநாட்டிற்கு ரொனால்டோ வருகை குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ரொனால்டோ மாநாட்டிற்கு வருவதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அதேசமயம், நடைபெற்று முடிந்த மாநாட்டிற்கு ரொனால்டோ வந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை.

மேலும், த.வெ.க-வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து தேடியதில், அவ்வாறான எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை. தொடர்ந்து, புதிய தலைமுறை ஊடகத்தின் சமூக வலைதளங்களில் சமீபத்திய பதிவுகளில் தேடியபோது, வைரலாகும் நியூஸ் கார்டைப் போன்று எதுவும் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது. அதேபோன்று இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

புதிய தலைமுறை வெளியிட்டுள்ள விளக்கம்
புதிய தலைமுறை வெளியிட்டுள்ள விளக்கம்

Conclusion:

நம் தேடலின் முடிவாக கால்பந்து வீரர் ரொனால்டோ த.வெ.க மாநாட்டிற்கு வருகை தர உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in