பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கதவின் மீது ஏறி குதித்துச் சென்று அகிலேஷ் யாதவ்
பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கதவின் மீது ஏறி குதித்துச் சென்று அகிலேஷ் யாதவ்

Fact Check: பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கதவின் மீது ஏறி குதித்துச் சென்றாரா அகிலேஷ் யாதவ்?

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர்களை சந்தித்காமல் கதவின் மீது ஏறி குதித்து சென்றார் என்று வைரலாகும் காணொலி
Published on

“இளம் பெண்ணை கற்பழித்தது உறுதி. நான் அந்தத் தவறை செய்யவில்லை எனது கட்சித் தலைவர் மீது ஆணையாக சொல்கிறேன் செய்யவில்லை என்று நேற்று வரை பொய் கூறிய மனிதர். தவறு நடந்துள்ளது என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் சார்ந்த கட்சித் தலைவரை மீடியாக்கள் பேட்டி எடுக்க செல்லும்பொழுது நடந்த நடவடிக்கை பாருங்கள் மக்களே. சமாஜ்வாதி கட்சித் தலைவர் நபாப் சிங் யாதவ் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தது DNA சோதனையில் உறுதி செய்யப்பட்டது. பல்வேறு சேனல்களின் நிருபர்கள் அகிலேஷ் யாதவை சூழ்ந்து கொண்டனர். அகிலேஷ் யாதவ் பதில் சொல்ல முடியாமல் குதித்து ஓடினார்” என்ற கேப்ஷனுடன் அகிலேஷ் யாதவ் பத்திரிக்கையாளர்களைத் தாண்டி கதவின் மீது ஏறி குதித்து செல்லும் காணொலி என்று கூறி வலதுசாரியினரால் சமூக வலைதளங்களில் (Archive) பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி Hindustan Times வைரலாகும் காணொலி குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், “சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜெய் பிரகாஷ் நாராயணின் பிறந்தநாளான புதன்கிழமை லக்னோவில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்திற்குள்(JPNIC) நுழைய முயன்றபோது சுவரில் ஏறினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே செய்தியை Times of India காணொலியுடன் வெளியிட்டுள்ளது. மேலும், ABP ஊடகமும் விரிவாக இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்நிகழ்வு குறித்த மிக நீண்ட பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கதவின் மீது ஏறி குதித்து செல்லும் அகிலேஷ் யாதவ் என்று வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் ஜெய் பிரகாஷ் நாராயணின் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்திற்குள் அகிலேஷ் யாதவ் நுழைய முயன்றபோது சுவரில் ஏறினார் அப்போது எடுக்கப்பட்ட காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

logo
South Check
southcheck.in