அழுகிய பெண்ணின் உடலுக்கு குளிப்பாட்டும் காட்சி; உண்மையில் நடைப்பெற்ற நிகழ்வா?

இஸ்லாமியர்கள் சிலர் இறந்து அழுகிய நிலையில் உள்ள பெண்ணின் உடலுக்கு குளிப்பாட்டும் காட்சி உண்மை என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது
இறந்து அழுகிய நிலையில் உள்ள பெண்ணின் உடலுக்கு குளிப்பாட்டும் இஸ்லாமியர்கள்
இறந்து அழுகிய நிலையில் உள்ள பெண்ணின் உடலுக்கு குளிப்பாட்டும் இஸ்லாமியர்கள்

“நான்தான்  அழகியவள் வசதியானவள் எனக்கு மட்டுமே பிறரை கஷ்டப்படுத்த தெரியும் என்ற திமிரில் ஆடாதே ....அப்படி ஆடியவரின் நிலைதான் இது… உயிர் இருக்கும் வரை மட்டுமே தான் உனது ஆட்டம்..... பின்பு பார் உனது உடலை தூக்கி குளிப்பாட்டக்கூட அருவெறுப்புப்டுகிறார்கள்.... இதுதான் உனது அழகின் நிலை....!!!...” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்றை இஸ்லாமியர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், இஸ்லாமியர்கள் சிலர் இறந்து துர்நாற்றம் வீசும் அழுகிய நிலையில் உள்ள பெண்ணின் உடலுக்கு குளிப்பாட்டும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், குளிப்பாட்டும் போது தண்ணீரில் இருந்தும், இறந்த பெண்ணின் முகத்தில் இருந்தும் ஆவி வருவதும் பதிவாகியுள்ளது.

Fact-check:

முதற்கட்டமாக காணொலியை ஆய்வு செய்ததில் பல்வேறு இடங்களில் சினிமாட்டிக் முறையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதும், எடிட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அதில் இருக்கக்கூடிய நபர்கள் நடிப்பதை நம்மால் காண முடிகிறது. தொடர்ந்து, காணொலியின் 3:45வது பகுதியில் “Dzolim” என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அதனைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம்.


அப்போது, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி Medcom என்ற இந்தோனேசிய இணையதளத்தில் இந்தோனேசிய மொழியில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதன்படி, “இறந்த நபரின் உடல் சிமெண்ட் கலவை இயந்திரத்தில் சிக்கிய காட்சி உண்மை என்று சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது உண்மையல்ல, Dzolim என்ற இந்தோனேசிய நாடகத் தொடரில் வரும் காட்சியின் ஒரு பகுதி” என்று கூறப்பட்டுள்ளது.

"Dzolim" என்று குறிப்பிடப்பட்டுள்ள காணொலியின் பகுதி
"Dzolim" என்று குறிப்பிடப்பட்டுள்ள காணொலியின் பகுதி

கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் தேடுகையில், "Dzolim என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட இஸ்லாமிய நாடகத் தொடர் என்றும் இது இந்தோனேசியாவின் MNCTV என்ற தொலைக்காட்சி சேனலில் 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது" என்றும் விக்கிப்பீடியா வாயிலாக தெரியவந்தது. மேலும், யூடியூபில் வைரலாகும் காணொலி குறித்து யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி MMCTVயின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலி வெளியிடப்பட்டுள்ளது‌.

Conclusion:

முடிவாக, இறந்த பெண்ணின் உடலுக்கு குளிப்பாட்டும் காட்சி உண்மையல்ல. மாறாக, அது இந்தோனேசிய தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்ட Dzolim என்ற நாடகத்தின் ஒரு பகுதி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in