Fact Check: இளநீர் விற்கும் தனது தாயை சர்ப்ரைஸாக நேரில் சந்தித்த ராணுவ வீரர்; உண்மையில் நடைபெற்ற சம்பவமா?

சாலையோரம் இளநீர் விற்கும் தனது தாயை ராணுவத்தில் பணியாற்றிய மகன் சர்ப்ரைஸாக நேரில் சந்திக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சாலையோரம் இளநீர் விற்கும் தனது தாயை சந்தித்த ராணுவ வீரர்
சாலையோரம் இளநீர் விற்கும் தனது தாயை சந்தித்த ராணுவ வீரர்
Published on
1 min read

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மகன் ரோட்டோரத்தில் இளநீர் விற்கும் தனது தாயை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக நேரில் வந்து சல்யூட் அடித்து நிற்கும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இக்காணொலியின் உண்மைத்தன்மையை கண்டறிய முதலில் காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது அதன் இறுதியில், “இக்காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்றும் இது ரீல் வீடியோ” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட காணொலி என்று அறிய முடிகிறது.

வைரலாகும் காணொலியின் இறுதியில் உள்ள Disclaimer
வைரலாகும் காணொலியின் இறுதியில் உள்ள Disclaimer

தொடர்ந்து காணொலியின் ஒரு பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த நவம்பர் 12ஆம் தேதி Sanjjanaa Galrani என்ற பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதிலும் இது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அப்பக்கத்தில் இதே போன்ற பல்வேறு விழிப்புணர்வு காணொலிகள் பதிவிடப்பட்டுள்ளன.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் ராணுவத்தில் பணியாற்றிய மகன் சாலையோரம் இளநீர் விற்கும் தனது தாயை சர்ப்ரைஸாக நேரில் சந்திக்கும் காணொலி உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அது பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in