Fact-check:
சவுத் செக்கின் ஆய்வில் இது தவறான தகவல் என்றும் காணொலியில் இருப்பவர் நடனக் கலைஞர் என்றும் தெரியவந்தது.
முதலில் முத்தையா முரளிதரன் இவ்வாறு நடனம் ஆடினாரா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, அவ்வாறான எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, இரண்டு காணொலிகளையும் தனித்தனியே ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் இரண்டு காணொலிகளையும் (காணொலி 1, காணொலி 2) Kiran Jopale என்ற நடனக் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்ஸ்டாகிராம் நடனக் கலைஞரின் தோற்றமும், முத்தையா முரளிதரனின் தோற்றமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் இவரை முத்தையா முரளிதரன் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பெண்களுடன் சேர்ந்து நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்று வைரலாகும் காணொலியில் இருப்பவர் நடனக் கலைஞரான Kiran Jopale என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.