“மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் பேட்டி! வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள். பொதுமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாக தேதியற்ற சன் செய்தி நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். முதல்வர் இவ்வாறான கருத்தைக் கூறியிருந்தால் பெரும்பாலான ஊடகங்கள் அதனை செய்தியாக வெளியிட்டிருக்கும். ஆனால், அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
தொடர்ந்து, வைரலாகும் நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, “மழை பாதிப்புகளை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் பேட்டி. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளேன்” என்று வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள அதே புகைப்படத்துடன் 2021ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி சன் செய்தி நியூஸ் கார்டை வெளியிட்டுள்ளது. இதனை எடிட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்று முதற்கட்டமாக கூற முடிந்தது.
மேலும், போட்டோ ஃபோரன்சிக் முறையில் வைரலாகும் நியூஸ் கார்டை ஆய்வு செய்ததில். அதில் இருக்கும் லோகோ, எழுத்துக்கள் உள்ளிட்டவை எடிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட் எடிட் செய்யப்பட்டது என்றும் அவ்வாறாக அவர் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.