Fact check: த.மா.கா. துணையின்றி தமிழகத்தில் ஒரு எம்பி கூட வெற்றி பெற முடியாது என்றாரா ஜி. கே. வாசன்?

தமிழ் மாநில காங்கிரசின் துணையின்றி தமிழகத்தில் ஒரு எம்பி கூட வெற்றி பெற முடியாது என்று அக்கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தினமலரின் நியூஸ் கார்ட்
தமிழகத்தில் தா.ம.க. துணையின்றி ஒரு எம்பி கூட வர முடியாது என்று ஜி.கே. வாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட்
தமிழகத்தில் தா.ம.க. துணையின்றி ஒரு எம்பி கூட வர முடியாது என்று ஜி.கே. வாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட்
Published on
1 min read

“G.K.வாசன் எச்சரிக்கை! தமிழ் மாநில காங்கிரஸ் துனையின்றி ஒரு எம்.பி கூட தமிழ் நாட்டிலிருந்து வெற்றி பெற முடியாது!” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் கூறியதாக நேற்றைய(பிப்ரவரி 6) தேதியிட்ட தினமலரின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் நியூஸ்கார்ட்
வைரலாகும் நியூஸ்கார்ட்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்றும் தெரியவந்தது. இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினாரா என்று அவரது சமூக வலைதளப் பக்கங்களில் தேடினோம். அப்போது, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி “வெளிநாட்டு பயணங்களுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். திமுகவின் கருப்பு சட்டை போராட்டம் தேர்தல் நாடகம்” என்று கூறியுள்ளார். மேலும், அதே தேதியில், “தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது” என்றும் கூறியுள்ளாரே தவிற வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற எந்த ஒரு தகவலும் அவரது சமூக வலைதள பக்கங்களில் இல்லை. அவ்வாறாக எந்த ஒரு செய்தியையும் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து, அவரது அலுவலகத்தை தொடர்பு கொண்டு இத்தகவல் உண்மையா என்று நியூஸ்மீட்டர் சார்பாக கேட்டதற்கு, “அவ்வாறான எந்த கருத்தையும் ஜி.கே. வாசன் தெரிவிக்கவில்லை என்றும் அது முற்றிலும் தவறான தகவல்” என்றும் விளக்கம் அளித்தனர். அதே போன்று வைரலாகும் நியூஸ் கார்ட் போலியானது என்றும் அதனை தினமலர் வெளியிடவில்லை என்று தினமலர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தமிழ் மாநில காங்கிரசின் துணையின்றி தமிழகத்தில் ஒரு எம்பி கூட வெற்றி பெற முடியாது என்று ஜி. கே. வாசன் தெரிவித்ததாக வைரலாகும் தினமலரின் நியூஸ் கார்ட் போலியானது என்றும் அவ்வாறான கருத்தை ஜி. கே. வாசன் தெரிவிக்கவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in