Fact Check: மே 16ல் தமிழக சட்டமன்றத் தேர்தல்? வைரலாகும் தேர்தல் கால அட்டவணை உண்மையா

வருகின்ற மே 16ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது
Fact Check: மே 16ல் தமிழக சட்டமன்றத் தேர்தல்? வைரலாகும் தேர்தல் கால அட்டவணை உண்மையா
Published on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஏப்ரல் 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், இச்செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டதாக கூறி பரப்பி வருகின்றனர்.

Fact check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் தற்போதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது. 

வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய முதலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, அவ்வாறான எந்த ஒரு செய்தியையும் எந்த ஒரு ஊடகமும் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. மேலும், 2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

தொடர்ந்து, தேடிய போது 2016ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் செய்து வெளியிட்டிருந்தது. இத்தகவலின்படி வைரலாகும் தகவல் பழையது என்று தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே 16ஆம் தேதி நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் இத்தகவல் பழையது என்றும் தெரியவந்தது.

logo
South Check
southcheck.in