

விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று அவர் அளித்த நேர்காணால் ஒன்றின் காணொலி சமூக வலைத்தலங்களில் (Archive) வைரலாகி வருகிறது
Fact check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பகிரப்படுவது தெரிய வந்தது.
பரப்பப்படும் கானொலியில் சன் நியூஸ் லோகோ மற்றும் 'கழகத் தலைவன்' திரைப்படத்தின் போஸ்டர் இருந்ததை அடிப்படையாகக் கொண்டு, சன் நியூஸ் தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட 19:47 நிமிடங்கள் கொண்ட முழுமையான நேர்காணல் காணொலி கிடைத்தது.
அதன், 17:30 பகுதியில், வைரலாகும் அதே காணொலியின் குறிப்பிட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் பேசும் உதயநிதி ஸ்டாலின், "தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்வதற்கு முன்பாக அவர் என்னை வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார். அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டுதான் நான் பிரச்சாரத்தைத் தொடங்கினேன்" என்று தெளிவாகக் கூறியிருப்பதை நம்மால் காணமுடிகிறது.
Conclusion:
முடிவாக நமது தேடலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் முன் விஜய்யின் வீட்டிற்கு சாப்பிட சென்றதாகவும், அவரிடம் வாழ்த்து பெற்று பிரச்சாரத்தைத் தொடங்கியதாகவும்" மட்டுமே அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விஜய்யின் ஆசிர்வாதத்துடன் உதயநிதி பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்று கூறி இந்த காணொலி தவறான கண்ணோட்டத்தில் பரப்பப்பட்டு வருகிறது.