Fact Check: கடற்கரையில் கஞ்சா காய வைத்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா? பரவும் வதந்தியும் உண்மை பின்னணியும்!
fifthestatedigital1

Fact Check: கடற்கரையில் கஞ்சா காய வைத்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா? பரவும் வதந்தியும் உண்மை பின்னணியும்!

கடற்கரை ஒன்றில் நபர் ஒருவர் பகிரங்கமாக கஞ்சாவை பரப்பி காய வைத்துவிட்டு, அதன் அருகிலேயே படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.
Published on

"ஜீரோ பெர்செண்டு கஞ்சா"புகழ் மாசு "சாருக்கு" யாராவது எடுத்து சொல்லுங்கப்பா... ஓரே"அக்கப்போருப்பா!" என்று கடற்கரையில் கஞ்சாவை காய வைத்துவிட்டு ஒருவர் தூங்கியது பற்றி ‘Behindwoods’ வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் (Archive) பரப்பி வருகின்றனர்

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் கேரளாவில் எடுக்கபட்டது என்று தெரியவந்தது.

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலின் உண்மைத்தன்மையை அறிய ‘Behindwoods’ செய்தித் தளத்தை ஆய்வு செய்தோம். அதில், கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் நபர் ஒருவர் கஞ்சாவை உலர வைத்துவிட்டு உறங்கியதாகவும், அவரைப் போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து ‘The South First’ ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தியை ஆராய்ந்ததில் கூடுதல் விவரங்கள் கிடைத்தன. அதன்படி, கோழிக்கோடு கடற்கரையில் கஞ்சாவுடன் உறங்கிய நபர், அதே நகரின் ‘வெள்ளயில்’ பகுதியைச் சேர்ந்த முகமது ரபி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடற்கரைக்கு நடைப்பயிற்சி சென்ற பொதுமக்கள், இவர் கஞ்சாவை காய வைத்துவிட்டுத் தூங்குவதைப் பார்த்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

Mathrubhumi ஆங்கில ஊடகமும் வைரலாகும் இப்புகைப்படத்துடன், இச்சம்பவம் கேரளாவின் கோழிகோடு மாவட்டதில் நடைபடேறது தான் என்று கடந்த ஜனவரி 16ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

Conclusion:

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அந்தப் புகைப்படம் மற்றும் செய்தி தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. அது கேரள மாநிலம், கோழிக்கோடு கடற்கரையில் நடந்த நிகழ்வாகும். அங்கு கஞ்சாவை காய வைத்துவிட்டுத் தூங்கியவர் கோழிக்கோட்டைச் சேர்ந்த முகமது ரபி என்பவராவார்.

logo
South Check
southcheck.in