Fact Check: தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?

தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது
Fact Check: தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?
fifthestatedigital1
Published on
1 min read

"தனியாக ஆட்டோ அல்லது காரில் பயணம் செய்யும் பெண்கள், தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், காவல்துறையினர் அந்த வாகனத்தை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிப்பார்கள்" என்று சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

Fact Check:

பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் தவறானது என்பதை SouthCheck நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரல் செய்தியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய நாம் பல்வேறு தரப்பு ஆதாரங்களை ஆய்வு செய்தோம். முதலாவதாக, ஒன்றிய அரசின் PIB Fact Check அமைப்பு இத்தகள் தவறானது என்று வெளியிட்டுள்ளது. மேலும், அதில் இருக்கும் தொடர்பு எண் பல ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் நிறுத்தப்பட்ட ஒரு சேவையின் பழைய எண் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழக காவல்துறையால் அப்படி எந்த ஒரு எண்ணும் தற்போது அறிவிக்கப்படவில்லை.

அடுத்ததாக, இதே போலி செய்தி கடந்த காலங்களில் பெங்களூர் மற்றும் தெலங்கானா பகுதிகளிலும் பரவியுள்ளது. அப்போதே ஹைதராபாத் மற்றும் பெங்களூர் காவல்துறையினர் இதனை வதந்தி என்று அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இறுதியாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ Fact Check Unit, இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், தற்போது பரவும் செய்திக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Conclusion:

தமிழகத்தில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக 9969777888 என்ற உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது என்று பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது. இது பல ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் நிறுத்தப்பட்ட ஒரு சேவையின் பழைய எண்ணாகும்.

logo
South Check
southcheck.in