Fact Check: விகடன் அட்டைப்படத்தில் தவெக தலைவர் விஜய்? வைரலாகும் படத்தின் பின்னணி என்ன

தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய அட்டைப்படத்தை விகடன் ஊடகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம்
Fact Check: விகடன் அட்டைப்படத்தில் தவெக தலைவர் விஜய்? வைரலாகும் படத்தின் பின்னணி என்ன
fifthestatedigital1
Published on
1 min read

”C.ஜோசப் விஜய் ஆகிய நான்” என்று விஜய் புகைப்படத்துடன் விகடன் ஊடகம் தனது இதழில் அட்டைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் போலியானது என்று தெரிய வந்தது. 

வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய விகடனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கக்கூடிய சமீபத்தில் வெளியான  இதழ்களை ஆய்வு செய்தபோது அவ்வாறாக எந்த ஒரு அட்டைப்படத்தையும் விகடன் ஊடகம் வெளியிடவில்லை என்று தெரியவந்தது.

தொடர்ந்து, விகடன் ஊடகத்தின் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தோம். அப்போது, வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது போன்ற எந்த ஒரு அட்டைப்படத்தையும் விகடன் ஊடகம் வெளியிடவில்லை என்று மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. மேலும், வைரலாகும் அந்த புகைப்படம் போலி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலில் முடிவாக நடிகர் விஜய்யின் புகைப்படத்துடன் விகடன் ஊடகம் அட்டைப்பட செய்திகளை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் போலி என்று தெரியவந்தது.

logo
South Check
southcheck.in