Fact Check: கச்சத்தீவு விவகாரம்: தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று கூறிய வைகோ; வைரல் காணொலியின் உண்மை பிண்ணனி?

தமிழ்நாட்டிற்கு எல்லா வகைகளிலும் காங்கிரஸ் துரோகம் செய்தது என்று மதிமுக நிறுவனர் வைகோ கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
கச்சத்தீவு விவகாரம் குறித்து வைக்கோ பேசியதாக வைரலாகும் காணொலி
கச்சத்தீவு விவகாரம் குறித்து வைக்கோ பேசியதாக வைரலாகும் காணொலி
Published on
1 min read

கச்சத்தீவை காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரைவார்த்ததாகவும், அதற்கு திமுக துணை போனதாகவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். 


இந்நிலையில், மதிமுக நிறுவனர் வைகோ கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ANI ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ANI ஊடகமும் நேற்று(ஏப்ரல் 3) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மதிமுக நிறுவனர் வைகோ கூறுகையில், “அந்த நேரத்தில் தமிழகத்திற்கு எல்லா வகையிலும் காங்கிரஸ் துரோகம் செய்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Fact-check:

இத்தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்டு சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இன்று (ஏப்ரல் 4) புதிய தலைமுறை இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ANI ஊடகத்திற்கு வைகோ அளித்திருந்த பேட்டி என்று, “முன்பு ஒரு காலத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டை எல்லா வகைகளிலும் புறக்கணித்தது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருந்த இந்த 10 வருட காலம் நரேந்திர மோடிக்கு சோதனைக் காலம்.

நரேந்திர மோடி ஒரு தேசத்துரோகி. தற்போது, நரேந்திர மோடி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா, இலங்கையையும் புறக்கணிக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ANI ஊடகத்தின் முழு நீளக் காணொலியை சன் நியூஸ் ஊடகமும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று(ஏப்ரல் 3) வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக முன்பு ஒரு காலத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டை எல்லா வகைகளிலும் புறக்கணித்தது என்று வைகோ கூறியதை மட்டும் எடிட் செய்து தவறான செய்தியை ANI ஊடகம் வெளியிட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in