Fact check: விவசாயம் செய்யும் ரோபோ: வைரல் காணொலியின் உண்மை பின்னணி!

ரோபோ ஒன்று விவசாயம் செய்வது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
விவசாயம் செய்யும் ரோபோ என்று வைரலாகும் காணொலி
விவசாயம் செய்யும் ரோபோ என்று வைரலாகும் காணொலி

“வேலையை வஞ்சகம் செய்யாமல் வேலை கொடுப்பவருக்கு துரோகம் செய்யாமல் அது பாட்டுக்கு வேலை செய்யும் ரோபோ. அறுவடைக்கு ஆள் கூலி தேவை இல்லை, டீ காசு கொடுக்கணும்னு தேவையில்லை, எட்டு மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்கள் இன்றைக்கு அஞ்சு மணி நேரம் வேலை செய்வதால் வந்த வினை ?” என்ற கேப்ஷனுடனும், வருங்காலத்தில் விவசாயத்தின் நிலை என்றும் ரோபோ ஒன்று அறுவடை செய்யும் இரு வேறு காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று நிரூபிக்க முடிந்ததும். இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் இரண்டு காணொலிகளையும் கூர்ந்து கவனித்தோம். அப்போது, அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது, ரோபோவின் கால்கள் தரையில் படவில்லை. மேலும், ரோபோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணொலி தெளிவின்றி(Blur) இருப்பதை நம்மால் காண முடிந்தது.

தரையில் படாத கால் மற்றும் தெளிவின்றி இருக்கும் ரோபோவை சுற்றியுள்ள பகுதி
தரையில் படாத கால் மற்றும் தெளிவின்றி இருக்கும் ரோபோவை சுற்றியுள்ள பகுதி

தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, TheFigen_ என்ற எக்ஸ் பயனர் இதே காணொலியை பதிவிட்டிருந்தார். அப்பதிவில், இது Wonder Studio என்ற AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று கம்யூனிட்டி நோட்ஸில் யூடியூப் காணொலியின் லிங்குடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகியிருந்த அக்காணொலியில், AI Video School என்ற யூடியூப் சேனல் வைரலாகும் காணொலிகளைப் போன்றே உருவாக்குவது எப்படி என்ற ஒரு விரிவான பயிற்சி காணொலியை வெளியிட்டு இருந்தது. மேலும், அக்காணொலியில் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒருவருடைய அசைவின் உதவியுடன் முப்பரிமாண ரோபோவை பொறுத்தி புதிதாக உருவாக்கப்படுவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற பல்வேறு காணொலிகளை Wonder Studio என்ற AI தொழில்நுட்ப உதவியுடன் உறுவாக்கியுள்ளதை அதே யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவில் விவசாயம் செய்யும் ரோபோ என்று வைரலாகும் காணொலி உண்மையில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in