ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா நடனமாடினாரா?

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா நடனமாடும் போது பெண் ஒருவரை இடித்ததாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா பெண்ணுடன் நடனமாடினார் என்று வைரலாகும் காணொலி
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா பெண்ணுடன் நடனமாடினார் என்று வைரலாகும் காணொலி

“இந்தத் தகுதி இல்லன்னா பாஜகால பெரிய பதவி கிடைக்குமா? வேற யாரும் இல்ல நம்ம ராஜஸ்தானின்

புதிய முதல்வர்” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடனமாடும் நபர் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா என்றும் அவர் நடனமாடும் போது அருகில் இருக்கும் பெண்ணை இடிப்பதாகவும் கூறி பரப்பப்பட்டு வருகிறது.

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலியில் இருப்பது Ashwani Meena என்பவர் என்று தெரியவந்தது. இக்கானொலியின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ashwanimeena16 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இதே காணொலியை 2023ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பதிவிட்டுள்ளார். மேலும், அவர் இது போன்று நடனமாடும் காணொலிகள் பலவற்றை பதிவிட்டுள்ளார்.

மேலும், அவரே டிசம்பர் 31ஆம் தேதி எடிட் செய்யப்பட்ட காணொலி ஒன்றை பதிவிட்டு, “தவறான தகவல்களை பகிர வேண்டாம். யாரோ காணொலியில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மாவின் பெயரை எழுதி தவறாக பரப்பி வருகின்றனர்” என்று கூறியுள்ளார். மேலும், கடந்த ஜனவரி 10ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக News 18 செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், Ashwani Meena என்பவர் அரசாங்க ஊழியர் என்றும் தன்னுடைய காணொலி தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா என்று தவறாக பரப்பப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

Conclusion:

நம் தேடலின் முடிவாக, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா என்று வைரலாகும் காணொலியில் இருப்பது Ashwani Meena என்ற இன்ஸ்டாகிராம் பயனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in