Fact Check: குழந்தையுடன் சாலையில் ஓடிய வெள்ள நீரில் விழுந்த பெண்ணின் காணொலி? உண்மை என்ன

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண் மற்றும் குழந்தை வெள்ள நீரில் கீவே விழுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
மோசமான நிலையில் தமிழ்நாடு சாலைகள்
மோசமான நிலையில் தமிழ்நாடு சாலைகள்
Published on
1 min read

தமிழ்நாட்டு சாலையில் ஓடிய வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து வந்த பெண்ணும் குழந்தையும் கீழே விழுந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு
வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொளியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, டைம்ஸ் ஆஃப் கராச்சி எனும் இணையத்தள ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் நடந்ததாக பதிவிட்டு இருந்தது.

பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள காணொலி
பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள காணொலி

இதனையடுத்து தொடர்ந்துதேடுகையில் பாகிஸ்தானின் ‘வாவ் 360’ ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இச்சம்பவம் பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் நடந்ததாக பதிவிடப்பட்டிருந்தது.

மேலும், பல்வேறு (பதிவு 1, பதிவு 2) ஊடகங்கள் இச்சம்பவம் பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்றதாகவே குறிப்பிட்ட இருந்தன.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் சாலையில் ஓடிய வெள்ளத்தின் போது இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து வந்த பெண்ணும் குழந்தையும் கீழே விழுந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வைரலாகும் காணொலி உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in