

முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக சங்கீத விவாகரத்து கோரியிருந்தார். இந்நிலையில், சங்கீதா ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்கு வந்ததாகக் கூறி காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரப்பி வருகின்றனர்.a
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த காணொலி குறித்து நடத்தப்பட்ட உண்மைச் சரிபார்ப்பில். வைரலாகும் அதே காணொலியை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் NewsTamil 24x7, Polimer உள்ளிட்ட ஊடகங்கள் தனது யூடியூப் சேனல்களில் வெளியிட்டுள்ளன. அதில், “வெற்றி தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வந்த நடிகர் விஜய் மனைவி சங்கீதா” என்று குறிப்பிடபட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலி பழையது என்றும் மாவீரன் படம் பார்க்க சென்ற போது எடுக்கபட்டது என்றும் தெரியவந்தது.
மேலும், விகடன் தளத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தியின்படி, இந்த காணொலிவானது நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஜனநாயகன் திரைப்படத்திற்காக வரவில்லை, மாறாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் (FDFS) பார்ப்பதற்காகத் திரையரங்கிற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்டதாகும். அப்போது திரையரங்கில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தியை சந்தித்து சங்கீதா மிகவும் மகிழ்ச்சியுடன் பேசியதாகவும், அந்தச் சமயம் எடுக்கப்பட்ட பழைய காட்சியே தற்போதைய சூழலில் தவறாகத் திசைதிருப்பப்பட்டுப் பரப்பப்பட்டு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.
Conclusion:
முடிவாக, தவெகவினர் தரப்பில் பரப்பப்பட்டு வரும் காணொலிவானது ஜனநாயகன் படத்துடன் தொடர்புடையது அல்ல என்பதும், அது கடந்த 2023 ஆம் ஆண்டு மாவீரன் படம் பார்க்க வந்தபோது எடுக்கப்பட்ட பழைய காணொளி என்பதும் நமது உண்மைச் சரிபார்ப்பில் தெளிவாகிறது