

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு விநாயகர் சிலையின் காணொலி வேகமாகப் பரவி வருகிறது. அதில், தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் காட்டிய சைகையைப் போன்ற தோற்றத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல பயனர்கள் இந்த சிலையை உண்மை என்றும், தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக இந்த சிலை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் இந்த காணொலியை ஆய்வு செய்ததில், அது நிஜமான சிலை அல்ல என்பது தெளிவாகிறது. காணொலியை கூர்ந்து கவனிக்கும்போது அதன் பின்னணி அமைப்புகள், வெளிச்சம், விநாயரின் விரல் மற்றும் கை அமைப்புகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் பொதுவான செயற்கைத் தன்மைகள் காணப்படுகின்றன. மேலும், அதில் இருக்கும் மனிதர்கள் திடீரெண்டு காணமல் போவதும் இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்பதை காட்டியது.
ஏஐ கண்டறியும் Hive Moderation இணையதளம் மூலம் சோதித்துப் பார்த்ததில், இந்த காணொலி 99.9% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அல்லது வேறு எங்கும் இத்தகைய தோற்றத்தில் நிஜமான சிலை வடிவமைக்கப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தியோ அல்லது நேரடிப் புகைப்படங்களோ பதிவாகவில்லை.
Conclusion:
சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய் பாணியிலான விநாயகர் சிலை எனப் பரப்பப்படும் புகைப்படம் முற்றிலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கற்பனைப் படமாகும். உண்மையில் அவ்வாறு எந்தவொரு நிஜ சிலையும் செய்யப்படவில்லை என்பதால், இந்தத் தகவல் தவறானது.