Fact Check: கைக்குண்டு வடிவிலான பேனாக்கள் வெடிப்பை ஏற்படுத்துவதாகக் கூடும் என்று வைரலாகும் தகவல்? உண்மை அறிக

கைக்குண்டு வடிவிலான பேனாக்கள் சிறிய குண்டுகளாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றை யாரும் தொட வேண்டாம் என்று எச்சரிக்கும் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது
Fact Check: கைக்குண்டு வடிவிலான பேனாக்கள் வெடிப்பை ஏற்படுத்துவதாகக் கூடும் என்று வைரலாகும் தகவல்? உண்மை அறிக
fifthestatedigital1
Published on
2 min read

சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் சமீபகாலமாக ஒரு பதற்றமான செய்தி வைரலாகப் பரவி வருகிறது. கைக்குண்டு வடிவிலான பேனாக்கள் உண்மையில் சிறிய ரக வெடிகுண்டுகள் என்றும், அவற்றை யாரும் தொட வேண்டாம் என்றும் அந்தச் செய்திகள் எச்சரிக்கின்றன. ஐந்து கையெறி குண்டுகளின் தோற்றத்தில் இருக்கும் பேனாக்களின் படத்தைப் பகிர்ந்து, அவற்றைக் கண்டால் தொடக்கூடாது என்று குரல் வழிச் செய்திகளும் பரப்பப்படுகின்றன. சிலர் இந்த வகை பேனாக்களை பாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fact Check:

சவுத்செக் நடத்திய விரிவான ஆய்வில், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரலாகும் அந்தப் படத்தில் உள்ளவை, கையெறி குண்டு வடிவில் வடிவமைக்கப்பட்ட வெறும் அலங்காரப் பேனாக்கள் மட்டுமே. அவற்றிற்கும் வெடிவிபத்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது குறித்து நம்பகமான செய்தித் தளங்களில் தேடியபோதும், இதுபோன்ற பேனாக்களால் வெடிவிபத்துகள் நிகழ்ந்ததாகவோ, அவை வெடிபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவோ எந்தச் சான்றும் கிடைக்கவில்லை.

இந்த வைரல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அமெரிக்காவைச் சேர்ந்த 'எட்ஸி' (Etsy) எனும் இ-காமர்ஸ் தளத்தில் இதே புகைப்படம் விற்பனைக்காக இருப்பது கண்டறியப்பட்டது. இவை அக்ரிலிக் ரெசின் பயன்படுத்தி லேத் இயந்திரத்தில் வடிவமைக்கப்பட்ட 'நாவல்டி' (Novelty) வகை பேனாக்களாகும். இவை 24-காரட் தங்கம், பித்தளை மற்றும் கன்மெட்டல் பூச்சுகளில், சாதாரண ரீஃபில் பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Etsy போன்ற தளங்கள் ஆயுதங்களையோ அல்லது அபாயகரமான வெடிபொருட்களையோ விற்பனை செய்ய அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவை வெறும் பொழுதுபோக்கு மற்றும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்ட பேனாக்கள் மட்டுமே.

Conclusion:

சமூக ஊடகங்களில் வரும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும், இத்தகைய போலியான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இது போன்ற செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

logo
South Check
southcheck.in