

“திமுக ஆட்சியில் பட்டா கத்தியுடன் சுதந்திரமாக ஆட்ட ஆட்டம் போடும் ரவுடிகள்..” என்ற தகவலுடன் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது. அதில், இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் நடனமாடும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact Check :
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி இலங்கையில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய முதலில் காணொலியை ஆய்வு செய்தபோது அதில் ஆடக்கூடிய நபருக்கு பின்னால் ‘சிங்கள மொழியில்’ எழுதப்பட்டிருப்பது Google Lens உதவியுடன் தெரியவந்தது. மேலும், Rangahala என்ற சிங்கள மொழி ஃபேஸ்புக் பக்கத்திலும் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அதில் இருக்கக்கூடிய எழுத்துக்களைப் பயன்படுத்தி ஜியோலொகேட் செய்து பார்த்தபோது, Golden fresh fish and meat என்ற இலங்கையின் நுகேகொடை என்ற நகரத்தில் இயங்கி வரும் இறைச்சிக்கடை என்பது தெரியவந்தது.
Conclusion
நம் தேடலில் முடிவாக தமிழ்நாட்டில் ரவுடிகள் பட்டாகத்தியுடன் சுதந்திரமாக திரிவதாக வைரலாகும் காணொலி இலங்கையில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.