Tamil

Fact Check: கோயில் வளாகத்தில் அசைவம் சாப்பிட்ட கிறிஸ்தவர்? சமூக வலைதளத் தகவலின் பின்னணியில் உள்ள உண்மை என்ன

கிறிஸ்தவர் ஒருவர் இந்து கோயிலுக்குள் சென்று அசைவ உணவு சாப்பிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்

Southcheck Network

தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகவும். கோயிலுக்குள் அசைவ உணவை சாப்பிட்டு கோயிலின் புனிதத்தை கிறிஸ்தவர்கள் எடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது.

​Fact check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையது என்பது தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, BKP-Prime என்ற ரெட்டிட் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பதிவிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அதே காணொலி குறித்து தேடுகையில் யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட தலங்களில் 2023ஆம் ஆண்டு வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்ததாக பதிவுகள் நமக்கு கிடைத்தன. மேலும் இச்சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வைரலாகும் இதே காணொலியை தனது எக்ஸ் தளத்தில் 2023ஆம் ஆண்டு பதிவிட்டிருந்த பாஜக உறுப்பினர் மற்றும் வழக்கறிஞரான அசோக் என்பவர் “அப்படித்தான் சிக்கன் பிரியாணி சாப்பிடுவோம் புதுக்கோட்டை தாஸ் சொல்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நம் தேடலில் இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெரிந்தது. எனவே இச்சம்பவத்தின் பின்னணி குறித்து சுயாதீனமாக விசாரிக்க முடியவில்லை.

​Conclusion:

நம் தேடலின் முடிவாக தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுக்குள் கிறிஸ்தவர் ஒருவர் சென்று அசைவ உணவு சாப்பிட்டதாக வைரலாகும் காணொலி 2023 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.

Fact Check: നിക്കോളസ് മഡുറോയുടെ കസ്റ്റഡിയ്ക്കെതിരെ വെനിസ്വേലയില്‍ നടന്ന പ്രതിഷേധം? ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: ICE protest in US leads to arson, building set on fire? No, here are the facts

Fact Check: ವ್ಯಾಪಾರಿಯೊಬ್ಬಳು ಅಳುತ್ತಾ ಗ್ರಾಹಕರ ಪಾದಗಳನ್ನು ಹಿಡಿದಿರುವ ವೀಡಿಯೊದ ಅಸಲಿ ಕಥೆ ಇಲ್ಲಿದೆ ನೋಡಿ

Fact Check: జగపతి బాబుతో జయసుధ కుమారుడు? కాదు, అతడు WWE రెజ్లర్ జెయింట్ జంజీర్

Fact Check: Protestors in Iran set cars on fire? No, video is from Greece