நடிகை திரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளது 
Tamil

Fact Check: நடிகை திரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதா? உண்மை என்ன

பிரபல நடிகை திரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Southcheck Network

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான திரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. 

வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரின் மூலம் இது தவறான தகவல் என்னு தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெரியவந்தது.

இது குறித்த உண்மை தன்மையை கண்டறிய கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது மாலைமலர் ஊடகம் இது தொடர்பாக கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என் வாழ்க்கைய மற்றவர்கள் முடிவெடுப்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. அப்படியே HONEYMOON செல்வதை பற்றியும் சொன்னால் நல்லது" என்று பதிவிட்டுள்ளார். அதே போல் அவரது தாயாரும், இது அடிக்கடி வரும் தகவல்கள் தான். இதில் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலை மலர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி

மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை திரிஷா வைரலாகும் தகவல் தவறானது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கம்

Conclusion:

நம் தேடலில் முடிவாக நடிகை திரிஷாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக வரும் தகவல் தவறானது என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் என்றும் தெரியவந்தது.

Fact Check: Muslim woman tied, flogged under Sharia law? No, victim in video is Hindu

Fact Check: ശിരോവസ്ത്രം ധരിക്കാത്തതിന് ഹിന്ദു സ്ത്രീയെ ബസ്സില്‍നിന്ന് ഇറക്കിവിടുന്ന മുസ‍്‍ലിം പെണ്‍കുട്ടികള്‍? വീഡിയോയുടെ വാസ്തവം

Fact Check: ಬಿಹಾರ್​ಗೆ ಹೊರಟಿದ್ದ RDX ತುಂಬಿದ ಲಾರಿಯನ್ನ ಹಿಡಿದ ಉತ್ತರ ಪ್ರದೇಶ ಪೊಲೀಸರು? ಇಲ್ಲ, ಇದು ಹಳೇ ವೀಡಿಯೊ

Fact Check: చంద్రుడిని ఢీకొట్టిన మర్మమైన వస్తువా? నిజం ఇదే

Fact Check: Muslims in Nasik arrested for ‘I Love Muhammad’ stickers? No, here’s the truth