கன்னடம் பேசிய வாடிக்கையாளரை இந்தி பேசச் சொன்னாரா வங்கி ஊழியர் 
Tamil

Fact Check: கன்னடம் பேசிய வாடிக்கையாளரை இந்தி பேசச் சொன்னாரா வங்கி ஊழியர்? உண்மை என்ன

கர்நாடகாவில் கன்னடத்தில் பேசிய முஸ்லீம் வாடிக்கையாளரை இந்தியில் பேசக் கூறிய வங்கி அலுவலர் என்று சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Southcheck Network

Story:

“கர்நாடகாவில் கன்னட மொழியில் பேசிய வாடிக்கையாளரை, வங்கி அலுவலர் ஹிந்தியில் பேசக் கூறியுள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி தான் இது” என்று கூறி 23 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகப் பரவி வருகிறது. அதில், பெண்கள் இருவரும் கன்னடம் மற்றும் ஹிந்தியில் மாறி மாறி திட்டிக்கொள்வதை தெளிவகாக் காண முடிகிறது.

வைரலாகும் பதிவு

Fact Check:

சவுத் செக்கின் ஆய்வில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவர் சண்டையிட்ட காணொலி என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Public TV ஊடகத்தின் யூடியூப் சேனலில் பரவி வரும் காணொலி குறித்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

அதில், இஸ்லாமிய பெண்ணே இந்தியில் பேசுகிறார். மற்றவர் கன்னடத்தில் பேசுகிறார். இந்நிலையில் உண்மையான காணொலியை எடிட் செய்து, இஸ்லாமியப் பெண் கன்னடத்தில் பேசியிருப்பது போல பரப்பி உள்ளனர்.

மேலும், Financial Express ஊடகத்திலும் வைரலாகும் காணொலி குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒரு பயணி கன்னடத்தில் பேச வேண்டும் என்று கூறுவதாகவும், மற்றொரு பயணி இந்தியில் பதிலளித்ததாகவும் கூறியுள்ளனர். 

இதன் மூலம், பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காணொலி இது. இதை கர்நாடகாவில் கன்னடத்தில் பேசிய முஸ்லீம் வாடிக்கையாளரை இந்தியில் பேசக் கூறிய வங்கி அலுவலர் எனக் கூறி தவறாகப் பரப்புகின்றனர் என்பது தெளிவாகிறது.

Conclusion:

நம் தேடலில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் பயணிகள் இருவர் சண்டையிட்ட காணொலியை கர்நாடகாவில் கன்னடத்தில் பேசிய முஸ்லீம் வாடிக்கையாளரை இந்தியில் பேசக் கூறிய வங்கி அலுவலர் என தவறாக பரப்பி வருகின்றனர் என்று அறிய முடிகிறது.

Fact Check: Hindus vandalise Mother Mary statue during Christmas? No, here are the facts

Fact Check: തിരുവനന്തപുരത്ത് 50 കോടിയുടെ ഫയല്‍ ഒപ്പുവെച്ച് വി.വി. രാജേഷ്? പ്രചാരണത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய்யின் ஆசிர்வாதத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டாரா?

Fact Check: ಇಸ್ರೇಲಿ ಪ್ರಧಾನಿ ನೆತನ್ಯಾಹು ಮುಂದೆ ಅರಬ್ ಬಿಲಿಯನೇರ್ ತೈಲ ದೊರೆಗಳ ಸ್ಥಿತಿ ಎಂದು ಕೋವಿಡ್ ಸಮಯದ ವೀಡಿಯೊ ವೈರಲ್

Fact Check: జగపతి బాబుతో జయసుధ కుమారుడు? కాదు, అతడు WWE రెజ్లర్ జెయింట్ జంజీర్