“சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் சுவாமிமார்கள்! ஐயப்ப பக்தர்கள் எரிமேலி வாவர் மசூதிக்கு செல்ல வேண்டாம்! தேவ பிரசன்னம் பார்த்து தேவசம் போர்டு அறிவிப்பு! பந்தள ராஜ குடும்பம் ஐயப்பனுக்கும் வாபருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு!” என்ற தகவல் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact Check:
சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவலை கேரள அமைச்சர் மறுத்துள்ளார் என்று தெரியவந்தது.
இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, PTI இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, சபரிமலையில் இருக்கும் வாவர் சுவாமி குறித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பரப்பிவரும் தகவல்கள் உண்மையானவை அல்ல என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், Mathrubhumi ஊடகம் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீ ராம தாச மடத்தின் தலைவர் சாந்தானந்த மகரிஷி என்பவர், வாவர் குறித்து தெரிவித்த வகுப்புவாத கருத்தை கண்டித்து, பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் CPM கட்சியைச் சேர்ந்த பிரதீப் வர்மா என்பவர் பந்தளம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதில், ஐயப்பனுடன் தொடர்புடைய வாவர் சுவாமியை ஒரு முஸ்லிம் தீவிரவாதியாகவும், வன்முறையாளராகவும் மகரிஷி சித்தரித்ததாக வர்மா குற்றம் சாட்டினார். மாநிலத்தில் அமைதியான சூழலை சீர்குலைக்க வேண்டுமென்றே இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டதாக அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் சபரிமலையில் இருக்கும் வாவர் சுவாமி குறித்து வலதுசாரியினர் பரப்பிவரும் தகவல்கள் உண்மையற்றது என்றும் கேரள தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் தெரியவந்தது.