பாகிஸ்தானை தாக்க தயாராகும் இந்திய ஏவுகணை 
Tamil

Fact Check: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஏவுகணையை தயார் செய்து வருகிறதா? உண்மை அறிக

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா ஏவுகணையை தயார் செய்வதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Ahamed Ali

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், “இதெல்லாம் பாத்தா பாகிஸ்தானுக்கு ஈரகொலை நடுங்காதா என்ன???” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், கனரக வாகனத்தில் ராணுவ ஏவுனை இருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத் செக்கின் ஆய்வில் வைரலாகும் காணொலி வீடியோ கேமில் இடம்பெற்றிருக்கும் காட்சி என்றும் அதில் இருக்கும் ஏவுகணை ரஷ்யாவை சேர்ந்தது என்றும் தெரியவந்தது. 

வைரலாகும் காணொலி உண்மைதானா என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உற்படுத்தியபோது, கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி Unique Games என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி இடம்பெற்றிருந்தது. அதே யூடியூப் சேனலை ஆய்வு செய்ததில், அதில் பல்வேறு வகையான வீடியோ கேம் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் வைரலாகும் காணொலி வீடியோ கேமில் இடம்பெற்றுள்ள காட்சி என்று முதற்கட்டமாக தெரிய வருகிறது.

தொடர்ந்து இது தொடர்பாக தேடுகையில் Missile gaming என்ற யூடியூப் சேனலில் 2024ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி வைரலாகும் காணொலியில் இடம் பெற்றுள்ள ஏவுகணையுடன் காணொலி வெளியிடப்பட்டிருந்தது. அதில், SnowRunne கேமில் இடம்பெற்றுள்ள ரஷ்ய ஏவுகணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொலியில் இடம்பெற்றுள்ள காட்சி வீடியோ கேமின் ஒரு பகுதி தான் என்று உறுதியாகிறது.

மேலும், அதில் இடம்பெற்றுள்ள ஏவுகையில் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது அது ரஷ்யாவின் RS-24 Yars வகை ஏவுகணை என்று தெரியவந்தது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் இந்தியா ஏவுகணையுடன் பாகிஸ்தானை தாக்குவதற்கு தயாராகி வருவதாக வைரலாகும் காணொலி வீடியோ கேமில் இடம்பெற்றுள்ள காட்சி என்றும் அதில் இருக்கக்கூடிய ஏவுகணை ரஷ்யாவை சேர்ந்தது என்றும் தெரியவந்தது.

Fact Check: Pro-Palestine march in Kerala? No, video shows protest against toll booth

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை பனையூருக்கு அழைத்தாரா விஜய்?

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್