கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் கடைசி செல்ஃபி 
Tamil

Fact Check: கொலையுண்ட கொல்கத்தா மருத்துவரின் கடைசி செல்ஃபி என்று வைரலாகும் காணொலி: உண்மை என்ன?

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் கடைசி செல்ஃபி என்று வைரலாகும் காணொலி

Ahamed Ali

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது கடைசி செல்ஃபி என்று ஒரு காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இக்காணொலியில் இருப்பது ஜீனத் ரஹ்மான் என்ற பெண் என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, pununkashmircricket என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “தனது தாயிடம் கடைசியாக பேசியபோது மௌமிதா” என்ற கேப்ஷனுடன் உண்மையில் காணொலியில் இருப்பது ஜீனத் ரஹ்மான்(Zeenat Rahman) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தகவலை பலரும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு Zeenat Rahman என்பவரை சமூக வலைதளங்களில் தேடியபோது. அவரது  ஃபேஸ்புக் பக்கம் லாக் செய்யப்பட்டு இருந்தது. மேலும், தன்னை ஒரு கலைஞர் (Artist) என்று பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தேடியதில், Makeup Artist என்ற பேஸ்புக் குழுவில் அவர் தனது மேக்கப் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Zeenat Rahman மேக்கப் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அதே போன்று thelocaljournalist_tlj_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலி பூஜைக்காக கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீனத் ரஹ்மானின் மேக்கப் என்று பதிவிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு இவர் ஒரு மேக்கப் கலைஞர் என்பதை கூற முடிகிறது. வைரலாகும் இதே காணொலியை சவுத்செக் தெலுங்கும் பேக்ட்செக் செய்து கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் கடைசி செல்ஃபி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலியில் இருப்பது உண்மையில் கொல்கத்தாவைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் ஜீனத் ரஹ்மான் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Vijay’s rally sees massive turnout in cars? No, image shows Maruti Suzuki’s lot in Gujarat

Fact Check: പ്രധാനമന്ത്രി നരേന്ദ്രമോദിയെ ഡ്രോണ്‍ഷോയിലൂടെ വരവേറ്റ് ചൈന? ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: தவெக மதுரை மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றாரா எஸ்.ஏ. சந்திரசேகர்? உண்மை அறிக

Fact Check: ಮತ ಕಳ್ಳತನ ವಿರುದ್ಧದ ರ್ಯಾಲಿಯಲ್ಲಿ ಶಾಲಾ ಮಕ್ಕಳಿಂದ ಬಿಜೆಪಿ ಜಿಂದಾಬಾದ್ ಘೋಷಣೆ?

Fact Check: రాహుల్ గాంధీ ఓటర్ అధికార యాత్రను వ్యతిరేకిస్తున్న మహిళ? లేదు, ఇది పాత వీడియో