தென்காசி மாவட்ட பெட்ரோல் பங்கில் அலைந்த சிங்கம் 
Tamil

Fact Check: தென்காசி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நடமாடிய சிங்கம்? வைரல் காணொலியின் உண்மை பின்னணி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் சிங்கம் நடமாடியதாக காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

“நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் தென்மலையிலிருந்து முக்கு ரோடு மார்க்கமாக ராஜபாளையம் சங்கரன் கோயில் செல்பவர்கள் அல்லது அங்கிருந்து திரும்புவோர்களுக்கு தகவல் சொல்லவும் சிங்கம் ஒன்று வழி தவறி வந்துள்ளது அதை வனத்துறையினர் பிடிக்கும் வரை சற்று பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் அவர்களை பயணம் செல்லுமாறு அறிவுறுத்தவும் செல்பவர்களும் சற்று கவனத்துடன் செல்லவும்” என்ற கேப்ஷனுடன் சிங்கம் ஒன்று பெட்ரோல் பங்கில் நடமாடும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. இந்நிகழ்வு தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றது என்று கூறி பரப்பி வருகின்றனர்.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, “குஜராத்தின் கிர் கிராமத்தில் உள்ள பெட்ரோல்பம்ப்பில் சிங்கம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு வாரம் பழமையான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது” என்று Mirror Now செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு குஜராத்தி மொழியில் தேடினோம். அப்போது, கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி News 18 Gujarati யூடியூபில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “அம்ரேலியின் தாரி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், நடந்த இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் சிக்கியது. தாரி - விசாவதர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் சிங்கம் ஒன்று திடீரென புகுந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை Divya Bhaskar என்ற குஜராத்தி ஊடகமும் வெளியிட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் சிங்கம் நடமாடியதாக வைரலாகும் காணொலி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Vijay Devarakonda parkour stunt video goes viral? No, here are the facts

Fact Check: ഗോവിന്ദച്ചാമി ജയില്‍ ചാടി പിടിയിലായതിലും കേരളത്തിലെ റോഡിന് പരിഹാസം; ഈ റോഡിന്റെ യാഥാര്‍ത്ഥ്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ಬುರ್ಖಾ ಧರಿಸಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದ ವ್ಯಕ್ತಿಯೊಬ್ಬನ ಬಾಂಗ್ಲಾದೇಶದ ವೀಡಿಯೊ ಭಾರತದ್ದು ಎಂದು ವೈರಲ್

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి