இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்த மாற்று மத இளைஞர்கள் 
Tamil

Fact Check: இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்றனரா மாற்று மத இளைஞர்கள்? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

மாற்றுமத இளைஞர்கள் இருவர் இஸ்லாமிய பெண்ணை கடத்திச் சென்று கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

Ahamed Ali

“முஸ்லிம் அல்லாதவர்களை நம்புவதாலும், அவர்களுடன் நட்பு கொள்வதாலும் ஏற்படும் விளைவுகள்” என்ற தலைப்புடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், “இந்த காணொலி கொல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய கல்லூரியின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது… முஸ்லிம் பெண் குல் ஃபஷான் தனது காதலன் அங்கித்துடன் 2 வருடங்களாக தகாத உறவில் வாழ்ந்து வந்தார்.

அந்தப் பெண் கர்ப்பமானபோது, அந்த இளைஞன் அந்தப் பெண்ணைப் பார்க்க அழைத்தான். அதன் பிறகு, அவளுடைய இரண்டு நண்பர்கள் அபினவ் மற்றும் ராஜு அந்தப் பெண்ணைப் பள்ளிக்குப் பின்னால் அழைத்து வந்து ஒரு ஸ்கார்பியோ காரில் அழைத்துச் சென்றனர்.  அந்தப் பெண் மூன்று நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள், பின்னர் அவளுடைய உடல் நிர்வாணமாகக் கண்டெடுக்கப்பட்டது... அவள் மதத்தையும் உலகத்தையும் விட்டுப் பிரிந்திருந்தாள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காணொலியில் மூன்று ஆண்கள் சேர்ந்து புர்கா அணிந்திருக்கும் இஸ்லாமிய பெண்ணை கடத்திச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் உண்மையற்றது என்றும் இக்காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.

இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் அதே காணொலி হাসির আড্ডা 2 (Laughter 2) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதன் கேப்ஷனில், “காதலுக்கு சம்மதிக்காத பெண்ணை அழைத்துச் சென்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்த ஃபேஸ்புக் பக்கத்தை ஆராய்கையில், “இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து காணொலிகளும் பொழுதுபோக்கிற்காக மட்டும். இவற்றை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கொண்டு வைரலாகும் காணொலியும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று நம்மால் அறிய முடிகிறது.

மேலும், வைரலாகும் காணொலியை போன்றே பல்வேறு (பதிவு 1, பதிவு 2) பொழுதுபோக்கு காணொலிகள் அப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேசமயம், அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு காணொலிகளில் வைரலாகும் காணொலியில் இருக்கும் அதே நபர் இடம்பெற்றுள்ளார் என்பதையும் நம்மால் காண முடிந்தது.

இருவேறு காணொலிகளில் இடம்பெற்றுள்ள ஒரே நபர்

Conclusion:

முடிவாக, நம் தேடலில் இஸ்லாமிய பெண்ணை கர்ப்பமாக்கி அவரை கடத்திச் சென்ற மாற்றுமத இளைஞர்கள் இருவர் அப்பெண்ணை கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Ragging in Tamil Nadu hostel – student assaulted? No, video is from Andhra

Fact Check: നേപ്പാള്‍ പ്രക്ഷോഭത്തിനിടെ പ്രധാനമന്ത്രിയ്ക്ക് ക്രൂരമര്‍‍ദനം? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: இறைச்சிக்கடையில் தாயை கண்டு உருகும் கன்றுக்குட்டி? வைரல் காணொலியின் உண்மையை அறிக

Fact Check: ನೇಪಾಳಕ್ಕೆ ಮೋದಿ ಬರಬೇಕೆಂದು ಪ್ರತಿಭಟನೆ ನಡೆಯುತ್ತಿದೆಯೇ? ಇಲ್ಲ, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: నేపాల్‌లో తాత్కాలిక ప్రధానిగా బాలేంద్ర షా? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి