இஸ்லாமியர்கள் காவல்துறையினர் தாக்கும் காணொலி 
Tamil

Fact Check: காவல்துறையினரை தாக்கிய இஸ்லாமியர்கள் என்று வைரலாகும் காணொலி? சமீபத்தில் நடைபெற்றதா

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காவல்துறையினரை தாக்கும் இஸ்லாமியர்கள் என்று காணொலி வைரலாகி வருகிறது

Ahamed Ali

“தமிழகத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் காவல்துறையின் நிலமை. வேலூர் மாவட்டம் #வாணியம்பாடியில்தான். காவல்துறை அதிகாரி இந்த அளவக்கு கேவலப்படுத்த பட்டுள்ளார்..” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், தொப்பி அணிந்த இஸ்லாமியர்கள் பலரும் சேர்ந்து காவலரிடம் மோதலில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது.

வைரலாகும் பதிவு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இந்நிகழ்வு 2019ஆம் ஆண்டு நடைபெற்றது என்று தெரியவந்தது.

இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது BJP Hosur மற்றும் Pandi DM உள்பட பல்வேறு ஃபேஸ்புக் பக்கங்களில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வைரலாகும் அதே காணொலி அதே தகவலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்காணொலி பழையது என்று தெரிய வருகிறது.

தொடர்ந்து இதுகுறித்து தேடிய போது, “சமூக வலைதளங்களில் வாணியம்பாடி நகர காவல் உதவி ஆய்வாளரிடம் பொதுமக்கள் பிரச்சனை செய்வது போன்ற ஒரு வீடியோ பரவி வருகிறது இது கடந்த 2019 இல் நடந்த சம்பவம், தற்போது நடந்தது போல சிலர் சித்தரித்து பரப்பி வருகின்றனர் மேற்படி தவறான காணொலி மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது” என்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி பதிவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அன்றைய முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். தொடர்ந்து, நவம்பர் 28ஆம் தேதி 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உருவானது.

காணொலியில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக உள்ளது. இதனைத் கொண்டும் இக்காணொலி பழையது என்பது நிரூபணமாகிறது. மேலும், 2019ஆம் ஆண்டு அதிமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Conclusion:

முடிவாக, நம் தேடலில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமியர்கள் காவலரை தாக்குவதாக வைரலாகும் காணொலியில் உள்ள சம்பவம் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Massive protest in Iran under lights from phones? No, video is AI-generated

Fact Check: ഇന്ത്യയുടെ കടം ഉയര്‍ന്നത് കാണിക്കുന്ന പ്ലക്കാര്‍ഡുമായി രാജീവ് ചന്ദ്രശേഖര്‍? ചിത്രത്തിന്റെ സത്യമറിയാം

Fact Check: மலேசிய இரட்டைக் கோபுரம் முன்பு திமுக கொடி நிறத்தில் ஊடகவியலாளர் செந்தில்வேல்? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி

Fact Check: ICE protest in US leads to arson, building set on fire? No, here are the facts

Fact Check: ಬಾಂಗ್ಲಾದೇಶದಲ್ಲಿ ಹಿಂದೂ ವಿದ್ಯಾರ್ಥಿಯನ್ನು ಕಟ್ಟಿ ನದಿಗೆ ಎಸೆದಿದ್ದಾರೆಯೇ?, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ