அயோத்தியில் தயார் நிலையில் இருக்கும் எலக்ட்ரிக் பஸ்கள் என்று வைரலாகும் புகைப்படம் 
Tamil

அயோத்தியில் இயக்குவதற்காக தயார் நிலையில் இருக்கும் எலக்ட்ரிக் பஸ்கள்: உண்மை என்ன?

அயோத்தியில் இயக்குவதற்காக தயார் நிலையில் இருக்கும் எலக்ட்ரிக் பஸ் என்று சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

Ahamed Ali

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், “அயோத்தியில் இயக்குவதற்கு எலக்ட்ரிக் பஸ்கள் தயார்நிலையில்” என்ற கேப்ஷனுடன் நீல நிற எலக்ட்ரிக் பஸ்ஸின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில் உள்ள பஸ்கள் டெல்லி அரசால் இயக்கப்படும் எலக்ட்ரிக் பஸ் என்று தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2022ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி Indiatimes செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், “காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(மே 24) இந்திரபிரஸ்தா டெப்போவில் இருந்து 150 புதிய மின்சார பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், முதல் மூன்று நாட்களுக்கு பயணிகள் இலவசமாக இதில் பயணம் செய்யலாம் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லி அரசாங்கம் வெளியிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து இது குறித்து தேடுகையில், டெல்லி அரசின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், Switch Delhi என்ற பிரச்சாரம் குறித்து கூறப்பட்டுள்ளது. மேலும், வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் Switch Delhi-யின் லோகோ அறிக்கையில் உள்ள புகைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. இவற்றைக் கொண்டு வைரலாகும் புகைப்படத்தில் உள்ள நீல நிற எலக்ட்ரிக் பஸ் டெல்லி அரசால் இயக்கப்படுவது என்று உறுதியாகக் கூறமுடிகிறது.

Switch Delhi லோகோ

மேலும், அயோத்தியில் எலக்ட்ரிக் பஸ்கள் விடப்பட்டுள்ளனவா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி Patrika ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “அயோத்தியில் செப்டம்பர் முதல் எலக்ட்ரிக் பஸ் சேவை துவங்கும் என்றும் முதற்கட்டமாக 25 பஸ்கள் இயக்கப்பட உள்ளன" என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த எலக்ட்ரிக் பஸ்கள் குறித்து Pawan Yadav Vlogs என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தியில் இயக்கப்படும் எலக்ட்ரிக் பஸ்கள் காவி நிறத்தில் இருப்பது தெரியவருகிறது.

Conclusion:

இறுதியாக, நம் தேடலில் அயோத்தியில் இயக்குவதற்காக தயார் நிலையில் இருக்கும் எலக்ட்ரிக் பஸ் என்று வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது டெல்லியில் ஓடக்கூடியவை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அயோத்தியில் இயக்கப்படும் பஸ்ஸின் நிறம் காவி என்றும் உறுதிபட கூற முடிகிறது.

Fact Check: Potholes on Kerala road caught on camera? No, viral image is old

Fact Check: ഇത് റഷ്യയിലുണ്ടായ സുനാമി ദൃശ്യങ്ങളോ? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ஏவுகணை ஏவக்கூடிய ட்ரோன் தயாரித்துள்ள இந்தியா? வைரல் காணொலியின் உண்மை பின்னணி

Fact Check: ರಷ್ಯಾದಲ್ಲಿ ಸುನಾಮಿ ಅಬ್ಬರಕ್ಕೆ ದಡಕ್ಕೆ ಬಂದು ಬಿದ್ದ ಬಿಳಿ ಡಾಲ್ಫಿನ್? ಇಲ್ಲ, ವಿಡಿಯೋ 2023 ರದ್ದು

Fact Check: హైదరాబాద్‌లో ఇంట్లోకి చొరబడి పూజారిపై దాడి? లేదు, నిజం ఇక్కడ తెలుసుకోండి