எஸ்பிஐ ரிவார்ட் பாயிண்ட் வழங்க செல்போனில் ஆன்ட்ராய்டு செயலியை நிறுவுமாறு வைரலாகும் தகவல் 
Tamil

Fact Check: எஸ்பிஐ ரிவார்ட் பாயிண்ட் பெற ஆண்ட்ராய்டு செயலியை செல்போனில் நிறுவுமாறு வைரலாகும் தகவல்! உண்மை என்ன?

எஸ்பிஐ வழங்கியுள்ள ரிவார்ட் பாயிண்ட்டைப் பெறுவதற்கு ஆண்ட்ராய்டு செயலியை ஸ்மார்ட்போனில் நிறுவுமாறும் சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்

Ahamed Ali

““

அன்பார்ந்த மதிப்பு வாடிக்கையாளரே, உங்கள் எஸ்பிஐ நெட்பேங்கிங் ரிவார்டு புள்ளிகள் (ரூ. 7250.00) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன & அது இன்றிரவே காலாவதியாகிவிடும்! இப்போது எஸ்பிஐ ரிவார்டு யோனோ செயலி நிறுவி உங்கள் கணக்கில் ரொக்க டெபாசிட் மூலம் உங்கள் வெகுமதியை கோருங்கள். நன்றி” என்று வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் (Archive) எஸ்பிஐ வங்கி தகவல் அனுப்பியதாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், SBI REWARDZ POINT.APK( APK என்பது ஆன்ட்ராய்டு போனில் இயங்கும் கோப்பு வகை) என்ற ஆன்ட்ராய்டு செயலியை ஸ்மார்ட்போனில் நிறுவுமாறும் கூறி இத்தகவல் பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் தகவல்

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் இத்தகவல் ஸ்பேம் என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஜுன் 2ஆம் தேதி Times of India இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மோசடி செய்திகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்பிஐ ரிவார்டு பாயிண்டுகளை மீட்பதற்காக மோசடி செய்பவர்கள் எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் APK மற்றும் மெசேஜ்களை அனுப்புவதாக” எஸ்பிஐ எக்ஸ் பதிவில் கூறியுள்ளது.

மேலும் அப்பதிவில், “எஸ்பிஐ வங்கி ஒருபோதும் இணைப்புகள் அல்லது கோரப்படாத APKகளை SMS அல்லது WhatsApp மூலம் அனுப்புவதில்லை என்று தெளிவுபடுத்துகிறது. இதுபோன்ற இணைப்புகளை கிளிக் செய்வதையோ அல்லது தெரியாத கோப்புகளை பதிவிறக்கம் செய்வதையோ தனது வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களில் 73 புகார்களுக்குப் பிறகு, எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் மோசடி குறித்து தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்று The Hindu செய்தி வெளியிட்டுள்ளது. News 18 ஊடகமும் இது ஸ்பேம் என்று செய்தி வெளியிட்டுள்ளது

Conclusion:

நம் தேடலின் முடிவாக எஸ்பிஐ ரிவார்ட் பாயிண்ட் வழங்கியுள்ளதாகவும் அது தொடர்பாக ஆண்ட்ராய்டு செயலியை ஸ்மார்ட்போனில் நிறுவுமாறும் வரும் தகவல் ஸ்பேம் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Fact Check: Muslim woman tied, flogged under Sharia law? No, victim in video is Hindu

Fact Check: ഓണം ബംപറടിച്ച സ്ത്രീയുടെ ചിത്രം? സത്യമറിയാം

Fact Check: யோகி ஆதித்யநாத்தை ஆதரித்து தீப்பந்தத்துடன் பேரணி நடத்தினரா பொதுமக்கள்? உண்மை என்ன

Fact Check: Christian church vandalised in India? No, video is from Pakistan

Fact Check: ಕಾಂತಾರ ಚಾಪ್ಟರ್ 1 ಸಿನಿಮಾ ನೋಡಿ ರಶ್ಮಿಕಾ ರಿಯಾಕ್ಷನ್ ಎಂದು 2022ರ ವೀಡಿಯೊ ವೈರಲ್