fifthestatedigital1
Tamil

Fact Check: வாரணாசியில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் எனப் பரவும் காணொலி? உண்மை என்ன

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் சமூக வலைதளங்களில் பரவும் காணொலி

Southcheck Network

பள்ளி மாணவி ஒருவரை இளைஞர் கும்பல் வழிமறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டு சில சமூக வலைத்தளப் பக்கங்களில் இந்த காணொலிபகிரப்பட்டு வருகிறது.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறவில்லை என்றும்; மாறாக, இது பிகார் மாநிலம் ஜமுய் பகுதியில் நிகழ்ந்துள்ளது என்றும் தெரியவந்தது.

பிகாரின் ஜமுய் பகுதியில் அமைந்துள்ள மட்வா பஹாத் பகுதிக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவரை வழிமறித்த ஒரு கும்பல் தகாத முறையில் அத்துமீறி நடந்து கொண்டது. இந்தச் சம்பவத்தின் காணொலி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பிகார் காவல்துறை போக்சோ சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்தது.

இந்த உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், India Today வெளியிட்ட செய்தி அறிக்கை இச்சம்பவம் பிகார் மாநிலம் ஜமுயில் நடந்ததை விளக்குகிறது. மேலும், The Times of India வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை மூலம் காவல்துறையின் துரித நடவடிக்கை மற்றும் கைது விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன், The New Indian Express வெளியிட்டுள்ள காணொலி செய்திப் பதிவு இந்தத் தாக்குதல் சம்பவம் பிகாரில் நடந்த ஒன்று என்பதைத் திட்டவட்டமாக நிரூபிக்கிறது.

Conclusion:

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பள்ளி மாணவி மீது பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. பிகார் மாநிலம் ஜமுய் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் காணொலியை, அரசியல் மற்றும் தவறான நோக்கங்களுக்காக வாரணாசியில் நடந்ததாகக் கூறி திசைதிருப்பி வதந்தியாகப் பரப்பியுள்ளார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Fact Check: Delhi Police open fire on Rahul Gandhi’s protest rally? No, here are the facts

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: தமிழ்நாட்டில் மகளிர் இலவசப் பேருந்தில் பெண்கள் சண்டையிட்டுத் தாக்கியதாகப் பரவும் காணொலியின் உண்மைப் பின்னணி?

Fact Check: ಜಂತರ್ ಮಂತರ್​ನಲ್ಲಿ ಗಲಭೆ ಎಬ್ಬಿಸಲು ಹಿಂದೂ ಸಂಘಟನೆಗೆ ಪೊಲೀಸ್ ಸಮವಸ್ತ್ರ ನೀಡಲಾಗಿದೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్