fifthestatedigital1
Tamil

Fact Check: பாலியல் தொல்லை கொடுத்தவர் திமுக நிர்வாகியா? உண்மை அறிக

திமுக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

Southcheck Network

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு நபர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் இருப்பவர் திமுக நிர்வாகி என்று கூறி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check:

வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை அறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தி பார்த்தோம் அப்போது, வைரலாகும் கானொளியில் உள்ள அதே புகைப்படத்துடன் OneIndia ஊடகம் 2025ஆம் ஆண்டு ஜனவரி, 30ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த பொன்னம்பலம், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர்கள் வீடு மாறிச் சென்ற பிறகும், தொலைபேசி வாயிலாக அநாகரீகமாகப் பேசித் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், அவரைத் துடைப்பத்தால் அடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

பெண்களின் புகாரின் பேரில் மணிமங்கலம் காவல்துறையினர் பொன்னம்பலத்தைக் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கட்சியின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொன்னம்பலத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்” என்று குறிபிட்டுள்ளது. இதே செய்தியை News 18 Tamil Nadu, தினகரன் உள்ளிட்ட ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

Conclusion:

வைரலாகும் கானொலியில் இருப்பவர் திமுக நிர்வாகி என்பது முற்றிலும் தவறான தகவல். அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதும், அந்தச் சம்பவத்தின் போதே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Fact Check: Video shows fire at Riyadh Airport after Houthi missile attack? No, video is unrelated

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: அபிஜீத் தீப்கே அமைதியைக் காப்பதாகக் கூறி சட்டப்பூர்வமான பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்டாரா? உண்மை அறிக

Fact Check: ಸಿಜೆಪಿ ಪ್ರತಿಭಟನೆಯಲ್ಲಿ ಸಿಖ್ ವೇಷ ಧರಿಸಿ ಸಿಕ್ಕಿಬಿದ್ದ ಮುಸ್ಲಿಂ ವ್ಯಕ್ತಿ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: ఢిల్లీలో సీఈసీ జ్ఞానేశ్ కుమార్‌కు వ్యతిరేకంగా నిరసనా? కాదు, పాత వీడియో వైరల్