fifthestatedigital1
Tamil

Fact Check: சேலம் சங்ககிரி அருகே மரத்திலிருந்து அதிசய ஊற்று போல் நீர் பீறிட்டு வந்ததா? வைரல் காணொலியின் உண்மை என்ன

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அடியிலிருந்து அருவி போல் தண்ணீர் பீறிட்டு வெளியேறிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட நிகழ்வு என்பது தெரியவந்துள்ளது

Southcheck Network

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஒரு மரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து, எந்தவித மோட்டார் உதவியுமின்றி நீர் ஊற்று போலவும், அருவி போலவும் அதிக வேகத்துடன் பீறிட்டு வெளியேறும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த பலரும் இயற்கையின் அதிசயம் என்றும், மரத்திலிருந்து தானாகவே ஊற்று நீர் பொங்கி வருவதாகவும் ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Fact Check:

சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் தகவல் தவறனாது என்று தெரியவந்தது.

வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை அறிய இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, One India Tamil இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியின்படி, சேலம் மாவட்டம் சங்ககிரி - திருச்செங்கோடு பிரதான சாலையில் உள்ள புளிய மரத்திலிருந்து திடீரென அருவி போல் தண்ணீர் கொட்டியது. பூமிக்கடியிலிருந்து நீரூற்று மரத்தின் வழியாக வருவதாகக் கருதி, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் இதை காணொலியாக எடுத்தனர்.

சுமார் 45 நிமிடம் இந்த வினோதம் நீடித்தது. பின்னர், மரத்தின் அடியில் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவே தண்ணீர் அதிக அழுத்தத்தில் பீறிட்டு மரத்தின் வழியாக வெளியேறியது எனத் தெரியவந்தது. குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டவுடன் இது நின்றது.

இதே செய்தியை NewsTamil 24X7 ஊடகமும் காணொலி செய்தியாக வெளியிட்டுள்ளது.

Conclusion:

சேலம் சங்ககிரி அருகே மரத்திலிருந்து அதிசய ஊற்று போல் தண்ணீர் வெளியேறியதாகப் பரவும் தகவல் தவறானது. காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததால் சுமார் 45 நிமிடங்கள் பீறிட்டு வெளியேறிய தண்ணீரின் காணொலியை, மரத்திலிருந்து ஊற்று வந்ததாகத் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check: Muslim youth attacks Hindu schoolgirl in Bangladesh? No, here are the facts.

Fact Check: കൊല്‍ക്കത്തയില്‍ വിമാനത്താവളത്തിനായി മുസ്ലിം പള്ളി പൊളിക്കുന്ന ദൃശ്യങ്ങള്‍? വീഡിയോയുടെ സത്യമറിയാം

Fact Check: ಢಾಕಾದಲ್ಲಿ ಮುಸ್ಲಿಂ ವ್ಯಕ್ತಿಯಿಂದ ಹಿಂದೂ ಯುವತಿಗೆ ಚೂರಿಯಿಂದ ಇರಿಯಲಾಗಿದೆಯೇ? ಸುಳ್ಳು, ಸತ್ಯ ಇಲ್ಲಿದೆ

Fact Check: భారత స్వదేశీ బుల్లెట్ రైలు వీడియో? కాదు, ఇది తైవాన్‌కు చెందినది

Fact Check: Priyanka Gandhi’s security disrespects CM Revanth Reddy? No, here are the facts