Fact Check: தமிழ்நாடு பாஜக எம்.பி வேட்பாளர்கள் பட்டியல்; அறிவிப்பு வெளியிட்டதா பாஜக தலைமை?

தமிழ்நாடு பாஜகவின் சார்பாக போட்டியிடும் 11 எம்.பி வேட்பாளர்கள் என்று வெளியான அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தமிழ்நாடு பாஜக எம்.பி வேட்பாளர்கள் 11 பேரின் பட்டியலை வெளியிட்டதா பாஜக தலைமை
தமிழ்நாடு பாஜக எம்.பி வேட்பாளர்கள் 11 பேரின் பட்டியலை வெளியிட்டதா பாஜக தலைமை
Published on
1 min read

“தமிழ்நாட்டில் 11 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் லீக்கானது” என்று தமிழ்நாட்டில் உள்ள 11 பாராளுமன்ற தொகுதிகளுக்கான பாஜக எம்.பி வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டதாக அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

வைரலாகும் அறிவிப்பு
வைரலாகும் அறிவிப்பு

Fact-check:

சவுத்செக்கின் ஆய்வில் தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களின் பட்டியல் என்று வெளியான அறிவிப்பு போலியானது என்பது தெரியவந்தது. இத்தகவலின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அவ்வாறாக உண்மையில் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மார்ச் 2ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் மார்ச் 13ஆம் தேதி இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் பாஜக தலைமை வெளியிட்டதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு பட்டியலிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேட்பாளர்களின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தேடியதில் அவ்வாறாக எந்த ஒரு பட்டியலும் இதுவரை தமிழ்நாட்டிற்கு வெளியிடப்படவில்லை என்பது உறுதியாகிறது. தொடர்ச்சியாக தமிழ்நாடு வேட்பாளர்களின் பட்டியல் என்று வெளியான அறிவிப்பு போலி என்று தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நேற்று(மார்ச் 18) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவில் தமிழ்நாடு பாஜகவின் சார்பாக போட்டியிடும் 11 வேட்பாளர்கள் என்று வெளியான அறிவிப்பு போலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in