உலகக்கோப்பை இறுதிப் போட்டி; மைதானத்தில் வலம் வந்தாரா பிரதமர் மோடி?

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலம் வந்ததாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
மைதானத்தில் வலம் வந்த பிரதமர் மோடி என்று வைரலாகும் காணொலி
மைதானத்தில் வலம் வந்த பிரதமர் மோடி என்று வைரலாகும் காணொலி
Published on
1 min read

“10 மேட்ச் நல்லா விளையாடினவங்க, இந்த அளவுக்கு சொதப்பனதுக்கு, என்ன காரணம்ன்னு, இப்ப தான்டா புரியுது… ஆட்டத்துக்கு முன்னாடியே நம்ம ஜீ நடத்திய இறுதி ஊர்வலம் தான் டா…” என்ற கேப்ஷனுடன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாகனத்தில் வலம் வரும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு பிரதமர் மோடியின் வருகையே காரணம் என்பது போன்று பரப்பப்படுகிறது.

Fact-check:

இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மார்ச் 9ஆம் தேதி “அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ்” என்ற வாட்டர்மார்க் உடன் News N View என்ற யூடியூப் சேனல் ஷார்ட்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற வாகனத்தில் மோடி மற்றும் அந்தோணி அல்பனிஸ் மைதானத்தைச் சுற்றி வலம் வந்தனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் கூகுளில் தேடியபோது, அதே மார்ச் 9ஆம் தேதி NDTV செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஒன்றாக போட்டியைப் காண்பதற்காக வருகை புரிந்தனர்.

முன்னதாக, இருவரும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மைதானத்தைச் சுற்றி வலம் வந்தனர். அப்போது, பலத்த ஆரவாரத்துடனும் கைதட்டலுடனும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இவற்றை உறுதிபடுத்தும் விதமாக Sansad TVயிலும் இக்காணொலி வெளியாகியுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வாகனத்தில் பிரதமர் மோடி வலம் வருவதாக வைரலாகும் காணொலி பழையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in