யாருமில்லா நடுவானில் கை அசைத்தாரா பிரதமர் நரேந்திர மோடி?

பிரதமர் நரேந்திர மோடி தேஜாஸ் போர் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது யாருமில்லா நடுவானில் கை அசைத்ததாக கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
நடுவானில் கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி என்று வைரலாகும் காணொலி
நடுவானில் கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி என்று வைரலாகும் காணொலி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். இந்நிலையில், அவர் பயணம் செய்யும் போது, நடுவானில் இருந்தபடியே அங்கிருந்து கை அசைத்துக் கொண்டே பயணம் செய்வது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுவானில் யாரும் இல்லாதபோதும் கூட மோடி கையசைத்து பயணம் செய்கிறார் என்று நையாண்டியாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Fact-check:

வைரலாகும் தகவல் உண்மையா என்பதைக் கண்டறிய பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, “தேஜாஸ் இந்தியாவின் பெருமை, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் திறமையின் வெளிப்பாடு” என்று கடந்த 25ஆம் தேதி காணொலி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அதில், 47வது நொடியில் பிரதமர் மோடி பயணிக்கும் விமானத்திற்கு அருகிலேயே மற்றொரு விமானம் ஒன்று பறப்பதை நம்மால் காண முடிகிறது. தொடர்ந்து, 54வது நொடியில் பிரதமர் அருகில் இருக்கும் விமானத்தை நோக்கி கை அசைக்கிறார். மேலும், பிரதமர் பயணிக்கும் விமானத்தில் இருக்கும் விமானியும், பிரதமர் மோடியும் கை அசைத்துள்ளனர், அக்காட்சியை 1:07 பகுதியில் காணமுடிகிறது.

Conclusion

முடிவாக, தேஜாஸ் போர் விமானத்தில் பறக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அருகில் பறந்த போர் விமானத்தை நோக்கியே கையை அசைத்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், யாருமில்லா நடுவானில் பிரதமர் கை அசைத்து சென்றதாகப் பரவும் செய்தி தவறானது என்பதையும் அறிய முடிகிறது.

Related Stories

No stories found.
logo
South Check
southcheck.in